மிரட்டலான படத்தில் களமிறங்கியுள்ள மாரி பட வில்லன்.. இது சைக்கோ படம் ஆச்சே.!

பிற மொழி திரைப்படங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் ரீமிக்ஸ் செய்யப்பட்டும் வருவது வழக்கமான ஒன்று தான். அவ்வாறு மொழிமாற்றம் செய்யும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.

அந்த வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்த மலையாள திரைப்படம் ஒன்று தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரன்சிக் என்னும் மலையாள திரைப்படம் தமிழில் கடைசி நொடிகள் என்னும் பெயரில் வெளியாகிறது.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் 2012ல் வெளிவந்த பிரபுவிந்தே மக்கால் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர்.

மேலும் இத்திரைப்படத்தில் மம்தா மோகன்தாஸ், ரெபோ மோனிகா, மோகன் சர்மா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை அனஸ்கான், அகில் பால் இயக்கி இருக்கிறார்கள். தற்போது பாரன்சிக் திரைப்படத்தினை ஏ. ஆர். கே ராஜ ராஜா தமிழில் மொழி பெயர்க்கிறார். விஷ்வ சாந்தி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

forensic
forensic

பெண் குழந்தைகளின் தொடர் கொலையை விசாரித்து கொலைகாரனை கண்டுபிடிக்கும் ஃபாரன்சிக் ஆபீஸர் ஆக நடித்திருக்கிறார் டொவினோ தாமஸ். இதனை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.