இதுல யாரு மாமனாரு? யாரு மருமகன்? ரஹ்மான் வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்

சில நடிகர்களுக்கு எவ்வளவு வயதானாலும் தெரியவே தெரியாது. இவருக்கு இவ்வளவு வயசாகிடுச்சானு ஆச்சரியப்படும் அளவுக்கு மிகவும் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள். உதாரணமாக நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் ஸ்கூல் பையனாக நடிக்கிறார். அதை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில் அவரின் தோற்றம் அதற்கேற்றவாறு உள்ளது.

தற்போது அப்படி தான் ஒரு மூத்த நடிகர் ஒரே ஒரு புகைப்படம் மூலம் ரசிகர்களை குழப்பியுள்ளார். அவர் வேறு யாருமல்ல கோலிவுட்டில் நிலவே மலரே படம் மூலம் நடிகராக அறிமுகமான ரகுமான் தான். தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரகுமான் இறுதியாக தமிழில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்திருந்தார்.

இதுதவிர தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ஜெயம் ரவியின் ஜன கண மன, விஷாலுடன் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரகுமான் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அதாவது இவரது மூத்த மகள் ருஷ்டாவிற்கும், அல்தாப் நவாப் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது மணமக்களுடன் ரகுமான் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் டிரண்டாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதில் யார் மாமனார் யார் மாப்பிள்ளை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

rahman-family
rahman-family

ஏனெனில் அந்த புகைப்படத்தில் ரகுமானை பார்க்க அவ்வளவு இளமையாக தோற்றம் அளிக்கிறார். மேலும் அவரை பார்த்தால் 54 வயது என கூறவே முடியாது. அந்த அளவிற்கு மிகவும் இளமையாக காணப்படுகிறார். இப்போது கூட இவரை திருமணம் செய்ய பலர் தயாராக இருப்பார்கள் என்பது போல நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை