உதவி இயக்குனரா இருக்கும் போதே ஆடி கார் தான்.. 5 படங்களில் அட்லி சேர்த்த மொத்த சொத்து மதிப்பு

Atlee Net Worth: காப்பி இயக்குனர் என்று கலாய்க்கப்பட்டாலும் அட்லி இப்போது பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பதே நிதர்சனம். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஜவான் தற்போது வரை 900 கோடியை நெருங்கி மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. இன்று தன்னுடைய 37வது பிறந்த நாளை கொண்டாடும் அட்லி இதுவரை ஐந்து படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். ஆனாலும் இவர் பல கோடிகளை சம்பாதித்து வைத்திருப்பது ஆச்சரியம் தான்.

Also read: ஷாருக்கான் பட்ட கஷ்டம் வீண் போகல.. அட்லி அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட 4வது நாள் வசூல்

அந்த வகையில் இவருடைய அப்பா ஒரு தொழிலதிபராக இருப்பதால் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தபோதே அட்லி ஆடி காரில் தான் வந்து இறங்குவாராம். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கவே சம்பளமும் கோடிகளில் வாங்க தொடங்கினார்.

அதன்படி இவர் ஜவான் படத்திற்காக 50 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாலிவுட் டாப் ஹீரோக்களின் படங்களை இவர் இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

Also read: வெளியவே விடாமல் அட்லியை அமுக்கும் ஷாருக்கான்.. ராட்சச திமிங்கலத்துக்கு வீசும் வலை

மேலும் ஹிந்தியில் ஒரு படத்தை தயாரிக்கும் முயற்சியிலும் இவர் இருக்கிறார். இப்படி பிசியாக இருக்கும் இவரிடம் பி.எம்.டபிள்யு, இனோவா, மினி கூப்பர் உள்ளிட்ட ரக ரகமான விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. அது மட்டுமின்றி சென்னையில் ஆடம்பர பங்களாவும் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இவர் வேறு சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். அதை அவருடைய மனைவி பிரியா கவனித்துக் கொள்கிறார். அந்த வகையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே 80 கோடியாக இருக்கிறது. ஆக மொத்தம் இளம் வயதிலேயே இவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Also read: எங்க அண்ணன ஏன் ஜவான்ல யூஸ் பண்ணல தெரியுமா.? பெரிய பிளானை தீட்டி வைத்திருக்கும் அட்லி

- Advertisement -