தமிழ் சினிமாவுக்கு ஒரேடியாக கும்பிடு போடும் ஷங்கர்.. ஊராடா இது என எஸ்கேப்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அது நிச்சயம் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அந்த அளவுக்கு அதிக பட்ஜெட்டில் திரைப்படத்தை எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இவர் இந்தியன் 2 திரைப்படத்தை ஆரம்பித்தார். ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக அந்த படம் பாதியிலேயே நின்று போனது. அதைத்தொடர்ந்து அவர் தமிழில் எந்த திரைப்படங்களையும் இயக்கவில்லை.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ஷங்கர் திடீரென்று தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு பக்கம் போனது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் விரைவில் அவர் தமிழ் சினிமாவுக்கு வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவரோ ஹிந்தியில் ஒரு படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். அதை தொடர்ந்து இந்தியன் 2 பட வேலைகளையும் அவர் ஆரம்பிப்பார் என்று சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் முடித்துவிட்டு ஷங்கர் தன்னுடைய கனவு திரைப்படத்தை எடுக்கும் முடிவில் இருக்கிறாராம்.

அதாவது அவருக்கு ரொம்ப நாட்களாகவே நீருக்கடியில் ஒரு அறிவியல் சார்ந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. அதைத்தான் தற்போது அவர் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தான் விஷயமே இருக்கிறது.

சங்கர் தன்னை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவை ஓரம் கட்டி விட்டு தன்னுடைய கனவு திரைப்படத்தில் மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில் ராம்சரண், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற ஹீரோக்களை அந்த படத்தில் நடிக்க வைப்பதற்கும் அவர் ஆலோசனை செய்து வருகிறாராம்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமிழ் திரையுலகம் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறது. அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தமிழ் சினிமாவை மதிக்காமல் போன சங்கரின் செயல் சில விமர்சனங்களையும் உருவாக்கி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இடம்பெறுவதும் சந்தேகம் தானாம். சங்கர் மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் வெளிவந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும்.

அப்படி இருக்கும் போது ஷங்கர் தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்குவதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் குழம்பிப் போய் இருக்கின்றனர். மேலும் அவரின் இந்த செயல் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

- Advertisement -