விஜய்யை வட்டமிடும் அக்கடதேச இயக்குனர்கள்.. கும்பிடு போட்டு வழியனுப்பிய தளபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் விஜய் ஆர்வமாக நடித்து வருகிறார். நாளுக்கு நாள் இப்படத்தில் இருந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யை எப்படியாவது இயக்கி விட வேண்டும் என்று அக்கடதேச இயக்குனர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

தற்போது விஜய் காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சில நாட்கள் ஓய்வில் இருக்கிறார். அந்த இடைவேளையில் தான் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து சாதனை படைத்தார். அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் சில இயக்குனர்களை சந்தித்து சில கதைகளையும் அவர் கேட்டிருக்கிறார்.

Also read: 2 வருஷம் காத்திருக்க வைத்த இயக்குனர்.. ஆசை தம்பிக்காக இறங்கி வருவாரா விஜய்

அப்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவர் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். வாரிசு படத்தால் பட்டதே போதும் என்று விஜய் அவருக்கு பெரிய கும்பிடாக போட்டு அனுப்பி வைத்து விட்டாராம். அதேபோன்று பாலிவுட் இயக்குனர் ஒருவரும் விஜய்யை சந்தித்து சில கதைகளை கூறியிருக்கிறார்.

மேலும் தனுஷ் போல் நீங்களும் ஹிந்தி திரை உலகில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசை வார்த்தையும் கூறி இருக்கிறார். ஆனால் விஜய் எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. அதனால் முதலில் கெஸ்ட் ரோலில் நடித்து பார்க்கிறேன். அது ஒர்க் அவுட் ஆனால் நேரடி ஹிந்தி படத்தில் நடிப்பது பற்றி யோசிக்கலாம் என்று கூறினாராம்.

Also read: லியோ படத்தில் இணைந்த மாஸ் ஹீரோ.. ரோலக்ஸை மிஞ்சும் கேரக்டர்

இதனால் வேறு வழி இல்லாத இயக்குனரும் யோசித்து முடிவு செய்யுங்கள் என்று கூறிவிட்டு வந்திருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது விஜய்க்கும் பாலிவுட் கனவு இருக்கிறது என தெரிகிறது. ஆனாலும் அவர் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்னும் முடிவில் உறுதியாக இருக்கிறார்.

அதனால் தான் தன்னை சந்திக்க வரும் இயக்குனர்களிடம் சாமர்த்தியமாக பதிலை கூறி அனுப்பி இருக்கிறார். ஆனாலும் விரைவில் அவரை நேரடி ஹிந்தி படத்தில் பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம். லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் அக்கடதேச இயக்குனர்களும் போட்டிக்கு வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: அடுத்த ஐந்து வருடத்திற்கு படு பிஸியாக இருக்கும் லோகேஷ்.. கைவசம் இருக்கும் 5 படங்கள்

- Advertisement -