மீனா நடிப்பில் மறக்க முடியாத 6 படங்கள்.. காலத்தால் அழியாத சோலையம்மா

நடிகை மீனாவின் கண்களே போதும். நடிப்பின் அத்தனை பாவத்தையும் தன் கண்களாலேயே காட்டிவிடுவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டாப் நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்த தற்போது முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீனா நடிப்பில் மறக்க முடியாத 6 படங்களை பார்க்கலாம்.

ஆனந்த பூங்காற்றே : ராஜ்கபூர் இயக்கத்தில் கார்த்திக், அஜித், மீனா, மாளவிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆனந்த பூங்காற்றே. இப்படத்தில் மீனாட்சி என்ற ஒரு விதவை கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இப்படத்தில் தனது தந்தையின் தவறான புரிதலால் தந்தையை இழந்த குழந்தைக்கு தாயாக மாறியிருப்பார் மீனா.

எஜமான் : சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் குழந்தையாக நடித்துவிட்டு அவருக்கு ஜோடியாக நடித்த படம் எஜமான். இப்படத்தில் ரஜினியின் மனைவியாக வைத்தீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மீனா ரசிகர்களை கவர்ந்தார்.

வெற்றிக்கொடி கட்டு : சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வெற்றிக்கொடிகட்டு. கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் குடும்பத்தை மனைவிதான் முன்னெடுத்த நடத்த வேண்டும் என்பதை மக்களுக்குப் புரியும்படி உணர்த்தி இருப்பார் மீனா.

ரிதம் : வசந்த் இயக்கத்தில் அர்ஜுன், ஜோதிகா, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரிதம். இப்படத்தில் ஒரு வங்கி ஊழியர் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இப்படத்தில் அர்ஜுன் மற்றும் மீனா இருவரின் முதல் வாழ்க்கை விபத்தால் பறிபோன நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்பதே படத்தின் கதை. இப்படத்தில் மீனா தத்ரூபமாக நடித்து இருப்பார்.

என் ராசாவின் மனசிலே : கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரன், மீனா, வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இப்படத்தில் சோலையம்மா என்ற மென்மையான கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இப்படத்தில் ராஜ்கிரணை பார்த்து அஞ்சி நடுங்கும் மீனாவின் நடிப்பு யதார்த்தமாக இருந்தது. பிரசவிக்கும் போது சோலையம்மாவின் இறப்பு படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்ணீர் வரச் செய்து.

நாட்டாமை : சரத்குமார், குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் நாட்டாமை. இப்படத்தில் மீனா இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதாவது பணக்கார திமிர் பிடித்த பெண்ணாகவும், அதன்பிறகு கணவனுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் குடும்பப்பாங்கான பெண்ணாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.