ஈகோவால் அடித்துக்கொள்ளும் முன்னணி நடிகைகள்.. பேசுற கெட்ட வார்த்தையில் கேட்கிற காது கருகிடும் போல!

தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் இரண்டு நடிகைகள் தங்களுக்குள் பனிப்போர் நடத்திக் கொள்வது கோலிவுட் வட்டாரங்களில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியவருகிறது.

ஒருவருக்கொருவர் சுத்தமாக பிடிப்பு இல்லையாம். ஒரு காலத்தில் தமிழில் முன்னணியில் இருந்த இரண்டு நடிகைகளில் தற்போது ஒரே ஒரு நடிகை மட்டும் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இன்னொரு நடிகை அந்த இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

பெரிய நம்பர் நடிகைக்கு ஒர்க் அவுட்டாவது சின்ன நம்பர் நடிகைக்கு ஒர்க்கவுட் ஆகவில்லை. அவரும் கமர்சியல் படம் நடித்தால் இவரும் கமர்ஷியல் படத்தை ஒப்புக் கொள்கிறார். பெரிய நம்பர் நடிகை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்தால் இந்த நடிகையும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார். ஆனால் பெரிய நம்பர் நடிகையை விட சின்ன நம்பர் நடிகையின் கதை தேர்வு மொக்கையாக இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகை தன்னை ஒப்பந்தம் செய்யவரும் தயாரிப்பாளரிடம் கண்டிப்பாக படத்தின் விளம்பரங்களுக்கு வரமாட்டேன் என பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்கிறார்.

ஆனால் இந்த நடிகையோ அப்படி எதுவும் ஆரம்பத்தில் சொல்லாமல் கடைசி நேரத்தில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறாராம். ஏன் என்று கேட்டால், அவ மட்டும் வர்றாலா என்ன? என அந்த நடிகையை வம்புக்கு இழுக்கிறார்.

ஆக மொத்தத்தில் இருவருக்குள்ளும் ஒரு பெரிய ஈகோ மோதல் நடந்து வருகிறது எனவும், எப்போது வேண்டுமானாலும் பொது இடங்களில் முடியை பிடித்து அடித்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். இவரைப் பற்றி அவரும் அவரைப் பற்றி வரும் பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்