லவ் பண்ண பாவத்துக்கு இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்க வேண்டுமா.. தலையில் அடித்துக் கொள்ளும் நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நடிகை சமீபகாலமாக தன்னுடைய காதலர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம். தேவையில்லாமல் காசை கரியாக்கினால் யாருக்குத்தான் கோபம் வராது.

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னணி இடத்தை பிடித்தவர் அந்த நடிகை. அதுமட்டுமில்லாமல் அந்த நடிகையின் வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். இருந்தாலும் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அந்த நடிகையின் பணத்தை சும்மா உட்கார்ந்துகொண்டு இஸ்டத்திற்கு அழித்து வருகிறாராம் அந்த காதலர். இயக்குனராக வலம் வரும் அந்த நடிகையின் காதலர் சமீபகாலமாக சின்ன சின்ன படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறாராம்.

இது தேவையில்லாத ஆணி என ஆரம்பத்திலேயே அந்த நடிகையை சொன்னாலும் தன்னுடைய அன்பால் அந்த நடிகையின் மனதை மாற்றி தற்போது பல சிக்கலில் மாட்டி விட்டாராம். நடிகையின் பாதி பணம் புதிய படங்களை வாங்கியதில் சிக்கிக்கொண்டதாம்.

தற்போதைக்கு அந்த படங்கள் வெளியாகவும் வாய்ப்பில்லை. ஓடிடியிலும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதனால் தன்னுடைய பணம் போச்சே என கவலையில் உள்ளாராம் அந்த நடிகை. காதல் மயக்கத்தில் காசு போச்சாம்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் ஆர்வம் கொண்டிருக்கும் அந்த நடிகை தற்போது சென்னையில் பல கோடி மதிப்பிலான இடங்களையும் கட்டிடங்களையும் வாங்கி குவித்து வருகிறாராம். அதெல்லாம் வேலைக்கு ஆகாது என காதலரின் பேச்சை நம்பி மோசம் போய் விட்டாராம். படம் எடுக்கவும் தெரியல, பிசினஸ் பற்றியும் ஒன்னும் தெரியல, சும்மாயிரு என்று சொன்னாலும் கேட்க மாட்ற என அந்த இயக்குனரை லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம் அந்த நடிகை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்