திருநங்கைகளாக மனதை கவர்ந்த 4 முன்னணி நடிகர்கள்.. அதுலயும் அந்த 3வது ஆளு நடிப்பு வேற லெவல்!

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்கள் கிடைத்தால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிக்கும் நடிகர்கள் சிலர்தான் இருக்கின்றனர். அந்த வகையில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்ற 4 முன்னணி நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

சரத்குமார்: ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் காஞ்சனாவாக நடித்து ரசிகர்களை திரையரங்குகளில் சர்ப்ரைஸ் செய்தவர் சரத்குமார். அந்தப் படம் வெளியாகும் வரை அப்படி ஒரு கதாபாத்திரம் இருப்பதே பலருக்கும் தெரியாது.

sarathkumar-kanchana
sarathkumar-kanchana

ஜெயம் ரவி: அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்து வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ஆதி பகவன். இந்த படத்தில் பகவான் பாய் என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் ஜெயம் ரவி.

jayam-ravi-aadhi-bhagavan
jayam-ravi-aadhi-bhagavan

விக்ரம்: விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற இருமுகன் படத்தில் லவ் என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன. அழகான சிறப்பான நடிப்பைக் கொடுத்து பலரையும் கவர்ந்தார்.

vikram-irumugan
vikram-irumugan

விஜய் சேதுபதி: சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் திருநங்கையாக நடித்து, திருநங்கைகள் படும் அவஸ்தைகளையும் கஷ்டங்களையும் தோலுரித்துக் காட்டினார். மேலும் இந்த படத்தில் வந்த சில்பா கதாபாத்திரம் இன்றும் பலருக்கும் பேவரைட்ஸ்.

vijay-sethupathi-super-deluxe
vijay-sethupathi-super-deluxe

அதனைத் தொடர்ந்து கவனிக்கப்படும் இளம் நடிகர்களான காளிதாஸ் ஜெயராம் என்பவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பாவ கதைகள் வெப்சீரிஸில் தங்கம் என்ற திருநங்கை கதாபாத்திரத்திலும், நடிகர் கதிர் சிகை என்ற படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்தனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்