வெற்றிமாறனின் அசுரன் படத்தை நிராகரித்த 4 முன்னணி நடிகர்கள்.. தேசிய விருது வாங்கியதால் புலம்பல்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருமாறியுள்ளார் வெற்றிமாறன். படத்திற்கு படம் தன்னுடைய திரைக்கதை மூலம் அனைவரையும் மிரள வைத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கடைசியாக வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன் படம் தேசிய விருது வென்று சாதனை படைத்தது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அது தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தானாகவே உருவாக்கி விடும்.

இதுவரை தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் மொத்தம் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. அந்த நான்கு படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் போன்ற படங்கள் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தின் கதையை இதற்கு முன்னர் சில முன்னணி நடிகர்கள் நான்கு பேரிடம் கூறியுள்ளாராம் வெற்றிமாறன்.

ஆனால் இதெல்லாம் ஒரு கதையா என்பது போல் அலட்சியமாக நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வயதான கதாபாத்திரத்தில் நடித்தால் என்னுடைய இமேஜ் என்ன ஆகும் என சில நடிகர்கள் நிராகரித்து விட்டார்களாம். இதனை வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

asuran-cinemapettai
asuran-cinemapettai

ஆனால் அந்த நடிகர்கள் யார் யார் என்பதை மட்டும் கூறாமல் நடந்த சம்பவத்தை மட்டும் கூறியதால் அந்த நான்கு பேர் யார்? என்பது ரசிகர்களுக்கு தெரியாமலேயே போய்விட்டது. அசுரன் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என இப்போது அந்த நான்கு நடிகர்களும் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம். யாராக இருக்கும்?

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -