பிரபுதேவா, உண்மையாலுமே நீங்க இயக்குனரா? அசிங்கப்படுத்திய டாப் நடிகர்

நடன இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவாக மாறி தற்போது இயக்குனராக வலம் வருகிறார் பிரபுதேவா. தென்னிந்திய சினிமாவை விட ஹிந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் அடிக்கும் படங்களை தேர்வு செய்து ஹிந்தியில் உள்ள முன்னணி நடிகர்களின் மண்டையை கழுவி அந்த படத்தை ரீமேக் செய்யும் வேலையைத்தான் சில காலமாக செய்து வந்தார் பிரபுதேவா.

ஆனால் இந்த முறை மொத்தமும் ஊத்திக் கொண்டது. இதுவரை மினிமம் கியாரண்டி இயக்குனராக இருந்த பிரபுதேவாவின் குட்டு சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ராதே படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது,.

சமீபத்தில் வந்த படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கழுவி ஊத்திய திரைப்படம் என்றால் அது ராதே படத்தை தான். அந்த அளவுக்கு படு கேவலமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன்காரணமாக படமும் அட்டர் ஃப்ளாப்.

இதனால் கடுப்பான சல்மான் கான், பிரபுதேவாவை அழைத்து செம டோஸ் விட்டதாக தெரிகிறது. உங்களை நம்பி இந்த படத்தின் வாய்ப்பை கொடுத்ததற்கு என்னை வச்சு செஞ்சுடீங்க என வருத்தப்பட்டாராம்.

ராதே படத்தின் தோல்வி ஹிந்தி சினிமாவின் மற்ற நடிகர்களையும் தட்டி எழுப்பிவிட்டதாம். இனி பிரபுதேவாவுடன் படம் செய்ய வேண்டாம் என முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. இனி நம் பருப்பு வேகாது என தெரிந்து கொண்ட பிரபுதேவா சென்னைக்கு வண்டியை கட்டிவிட்டாராம்.

prabhudeva-salman-khan-cinemapettai
prabhudeva-salman-khan-cinemapettai