மிஷ்கின் படத்தில் முதல் முறையாக இணைந்த முன்னணி நடிகர்.. எதிர்பார்ப்பை இரட்டிப்பாகும் பிசாசு 2

மாஸ் படங்களிலிருந்து ரசிகர்களின் கவனத்தை வித்தியாசமான திரைப்படங்களுக்கு திருப்பியவர் மிஷ்கின். கமர்சியல் படங்களை மட்டுமே ரசித்து வந்த ரசிகர்களை எதார்த்த படங்களையும் ரசிக்க வைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.

கடந்த சில வருடங்களாகவே மிஸ்கின் படங்கள் வெளியாகும்போது முன்னணி நடிகர்களின் படங்களை போல் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். அதற்கு சான்று தான் சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம்.

சைக்கோ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பிறகு தற்போது மிஷ்கின் தன்னுடைய முந்தைய சூப்பர் ஹிட் படமான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை பிசாசு2 என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விட்டதை இதில் பிடித்துவிட வேண்டும் என தன்னுடைய கதாபாத்திரத்தை செம ஸ்ட்ராங்கா எழுதும்படி மிஷ்கினிடம் கேட்டுக் கொண்டாராம்.

தற்போது பிசாசு 2 படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி இணைந்துள்ள தகவல்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக மிஷ்கின் படத்தில் இணைந்த முன்னணி நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான்.

pisasu2-cinemapettai
pisasu2-cinemapettai

பிசாசு 2 படத்தில் மிக குறைவான காட்சிகள் அதாவது கெஸ்ட் ரோலில் மட்டுமே விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். வருவது சில நிமிடங்களாக இருந்தாலும் இந்த கதாபாத்திரம் இன்னும் பத்து வருடத்திற்கு நின்று பேசும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

- Advertisement -