
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறிய செய்தி நீண்ட நாள் கழித்து கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக ரஜினி நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் அவருடைய கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் தான் 2.O.
ஷங்கர் இயக்கிய இந்தப் படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும் இந்த படம் பாகுபலி படங்களுக்கு சவால் விடும் எனவும் பேசிய நிலையில் பாகுபலியின் பாதி வசூலை கூட தாண்ட முடியாமல் தடுமாறியது.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன், வில்லனாக அக்ஷய்குமார் என படம் முழுக்க பிரம்மாண்டம் நிறைந்திருந்தது. ஆனாலும் என்னவோ தெரியவில்லை இந்த படம் ரசிகர்களை கவறாமல் போய் விட்டது.
இந்த படத்தில் பக்ஷிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அக்ஷய் குமார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க உலகநாயகன் கமலஹாசனிடம் தான் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.
ஆனால் அந்த கால கட்டங்களில் இணைந்து நடித்தது வேறு, இப்போது இருக்கும் காலகட்டம் வேறு எனக்கூறி 2.O படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் கமலஹாசன். ஒருவேளை கமலஹாசன் பக்ஷிராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் படம் நினைத்த வெற்றியைப் பெற்றிருக்கும் எனவும் யோசிக்கத் தோன்றுகிறது.
