கொடுத்த காசுக்கு திருப்தி, இந்த 7 விஷயங்களுக்காக போர் தொழில் பார்க்கலாம்.. பழுவேட்டரையரின் வெறித்தனம்!

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், சரத் பாபு, நிகிலா மற்றும் பலர் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் போர் தொழில். ஒரு படத்தைப் பார்ப்பதற்கு முன் சமீபகாலமாக விமர்சனத்தை பார்த்துவிட்டு தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்.

ஏனென்றால் நாம் கொடுக்கும் காசு மற்றும் நேரத்திற்கு சரியான படத்தை இயக்குனர் கொடுப்பாரா என்ற சந்தேகம் தான். ஆனால் ஒரு கணம் கூட யோசிக்காமல் போர் தொழில் படத்தை பார்க்க கண்டிப்பாக திரையரங்குக்கு செல்லலாம். அதற்கான முக்கிய ஏழு காரணங்களை இப்போது பார்க்கலாம்.

Also Read : காசே வாங்காமல் நட்புக்காக நடித்துக் கொடுத்த 5 நடிகர்கள்.. இமேஜ் பார்க்காமல் சரத்குமார் போட்ட கெட்டப்

போர் தொழில் படத்தைப் பார்த்தால் புது இயக்குனர் இந்த படத்தை எடுத்து இருக்கார் என்று யாராலும் நம்ப முடியாது. ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் நுணுக்கங்களுடன் எடுத்திருக்கிறார். சரத்குமாரை பொறுத்தவரையில் சில மிடுக்கான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.

ஆனால் போர் தொழில் படத்தில் சிபிசிஐடி ஆக தனது அனுபவத்தின் மூலம் கொலையாளியை கண்டுபிடிக்கும் போக்கு ரசிகர்களை கண்டிப்பாக கவரும். அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் பழுவேட்டையரின் நடிப்புக்கு சரியான தீனி போட்டு இருக்கிறார் போர் தொழில் இயக்குனர்.

சரத்குமாருக்கு சளைத்தவன் நான் இல்லை என்று நிரூபித்துள்ளார் இளம் நடிகர் அசோக் செல்வன். புதிதாக சரத்குமார் இடம் வேலைக்குச் சென்றிருக்கும் அசோக் செல்வன் தன்னுடைய புத்தக அறிவின் மூலம் கொலையாளி மற்றும் கொலைகாண காரணத்தை கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருக்கும். நான்காவதாக இப்படத்தை பார்க்க முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.

Also Read : கொலைகாரன் எப்படிப்பட்டவன், அவன் பண்ண கொலையை படிக்கணும்.. சரத்குமார் மிரட்டும் போர் தொழில் ட்ரெய்லர்

அதாவது அண்மையில் மறைந்த சரத் பாபு இதுவரை யாரும் பார்த்திடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் போர் தொழில் படத்தில் நடித்திருக்கிறார். ஐந்தாவதாக இப்படத்தில் பாடல், சண்டை என எதுவுமே இல்லை என்றாலும் இரண்டரை மணி நேரம் அந்த சீட்டிலையே நம்மை அமற வைத்துள்ளார் இயக்குனர்.

போர் தொழிலில் முக்கியமாக பாராட்டப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர். கலைச்செல்வன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பரந்து விரிந்து கிடக்கும் திருச்சியின் அழகை அழகாக காட்டு இருந்தார். அதுவும் இரவு நேர காட்சியில் திகிலை ஏற்படுத்தும் விதமாக இவரது ஒளிப்பதிவு இருக்கிறது.

போர் தொழில் படத்தில் ஒரு சில இடங்களில் சின்னக் குறைகள் இருந்தாலும் அதை பெரிதாக சொல்ல அங்கு ஒன்றுமே இல்லை. முதல் பாதியிலேயே கிட்டத்தட்ட படம் முடிந்து விட்டது, அப்படி என்னதான் இரண்டாம் பாதியில் இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் நினைத்தாலும் அதிலும் பிரமிக்கும்படியான காட்சிகளை இயக்குனர் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் போர் தொழில் ஆட்சி செய்யும்.

Also Read : Por Thozhil Movie Review – சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்.. சரத்குமார், அசோக் செல்வனின் போர் தொழில் முழு விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்