இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள்.. விக்ரம் வசூலால் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய கமல்!

சினிமா துறையை பொருத்தவரையிலும் தற்பொழுது வெளியாகும் டாப் ஹீரோக்களின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தின் வசூல் மட்டுமல்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களின் சம்பளமும், அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு  தாறுமாறாக எகிறி உள்ளது என்றே சொல்லலாம். அப்படியாக இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

தளபதி விஜய்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. அதிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. தனது படங்களின் மூலம் வசூல் வேட்டை நடத்தி வரும் விஜய் ஒரு படத்திற்காக மட்டும் 100 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

Also Read: அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரான லோகேஷ்.. அதிரடியாக கண்டிஷன் போட்ட விஜய்

அல்லு அர்ஜுன்: இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா. மேலும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அல்லு அர்ஜுனின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் ஏற்கனவே வெளியான புஷ்பா படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்காக மட்டும் 75 முதல் 100 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார். 

ரஜினிகாந்த்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். அதிலும் திரில்லர் கதை அம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்தை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் 80 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார்.

ஷாருக்கான்: சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் பதான். தற்பொழுது இதன் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது மார்க்கெட்டை உயர்த்திய ஷாருக்கான் ஒரு படத்திற்காக மட்டும்  கிட்டத்தட்ட 100 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

Also Read: 2-ம் பாகத்திற்காக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார்.. படத்தைப் பார்த்து பிரமித்துப்போன ரஜினி

மகேஷ் பாபு: டோலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான சர்க்காரு வரி பாட திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடித்து வரும் பெயரிடப்படாத அடுத்த படத்திற்காக 100 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

பிரபாஸ்: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி. இதன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் பான் இந்தியா படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஒரு படத்திற்காக மட்டும் 100 கோடி முதல் 150 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

கமல்ஹாசன்: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. மேலும் இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதிலும் இப்படத்திற்காக மட்டும் கமல் 150 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

- Advertisement -