டிஆர்பியில் முதல் 5 இடத்தை பிடித்த சேனல்கள்.. 2ம் இடத்துக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி!

சின்னத்திரை ரசிகர்கள் தொலைக்காட்சியில் எந்த சேனலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அந்த சேனல் டிஆர்பி-யில் மட்டுமல்லாமல் மக்களுக்கு பிடித்தமான தொலைக்காட்சியாகவும் மாறிவிடும். ஆகையால் ரசிகர்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக பார்க்கக்கூடிய தொலைக்காட்சியின் டாப் 5 சேனல்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

முதலிடத்தை சன் டிவி பிடித்துள்ளது. பல ஆண்டுகளாகவே சன்டிவி தன்னுடைய முதல் இடத்தை டிஆர்பி-யிலும் டாப் சேனல் லிஸ்டிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களும், அதன் பிறகு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் படத்திற்கு நிகரான தரத்துடன் இருப்பதால், பார்ப்பதற்கு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது. ஆகையால் இதுவே சன் டிவியின் வெற்றியாகவும் கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இடம் விஜய் டிவி பெற்றுள்ளது. பொதுவாக விஜய் டிவி-சன் டிவி சேனல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்றாற்போல் சன் டிவிக்கு நிகராகவே விஜய் டிவியும் புது புது கதைக்களத்தில் சீரியல்களை வழங்குவதும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது இடம் ஜீ தமிழுக்கு கிடைத்துள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளனர். அதைப்போல் 4-வது இடம் 24 மணி நேரமும் திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பு செய்யும் கே டிவி-க்கு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் ரசிகர்கள் எந்த திரைப்படத்தை பார்க்க நினைக்கின்றனர் என்பதை உணர்ந்து அதை ஒளிபரப்புவதன் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்த கின்றனர்.

ஐந்தாவது இடம் விஜய் சூப்பர் பெற்றுள்ளது. கே டிவிக்கு நிகராக விஜய் சூப்பரிலும் புது புது திரைப்படங்களையும் விதவிதமான தெலுங்கு, மலையாள திரைப்படங்களையும் ஒளிபரப்பி ரசிகர்களை கவர்கின்றனர். இவ்வாறு சின்னத்திரை ரசிகர்களுக்கு எந்த சேனல் பிடித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் டாப் சேனல் லிஸ்ட் ரசிகர்களிடையே சோஷியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது.