சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உலகளவில் முதல் நாளே வசூலில் மிரட்டி விட்ட டாப் 5 படங்கள்.. ஜெயிலரை ஓரம் கட்டிய லியோ

Top 5 Openers: லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இதனை தளபதி ரசிகர்கள் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடுகின்றனர். இதனால் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் லியோவுக்கு நல்ல ஓபனிங் கிடைத்து மாஸ் காட்டுகிறார்.

அதிலும் இந்த வருடம் வெளியான படங்களில் உலக அளவில் முதல் நாளில் அதிக வசூலை குவித்து சாதனை படைத்த 5 படங்களில் தளபதியின் லியோவும் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. அது மட்டுமல்ல ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் டார்கெட் ஆக இருந்தது. அது இப்போது நிறைவேறிய சந்தோஷத்திலும் இருக்கிறார்.

ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் முதல் நாள் ஓப்பனிங்-கில் 95.78 கோடியை மட்டுமே வசூலித்தது. ஆனால் நேற்று வெளியான லியோ உலகம் முழுவதும் 115.90 கோடியை வசூலித்திருக்கிறது. முதல் நாள் வசூலிலேயே லியோ ஜெயிலரை ஓரம் கட்டி விட்டது.

மேலும் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் முதல் நாளில் 136. 84 கோடியை வசூலித்து உலகம் முழுவதும் ஓப்பனிங்-கின் டே-வில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் லிஸ்டில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஷாருக்கான்- நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் படம் முதல் நாளில் 125.05 கோடியை வசூலித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

மூன்றாவது இடம் நேற்று வெளியான லியோ படம் 115.90 கோடியை உலகம் முழுவதிலும் முதல் நாளில் மட்டுமே வசூலித்ததால் கிடைத்திருக்கிறது. நான்காவது இடம் ஷாருக்கானின் பதான் படம் முதல் நாளில் 106 கோடியை வசூலித்ததால் கிடைத்தது. ஐந்தாவது இடம் தான் ரஜினியின் ஜெயிலர் படம் 95.78 கோடியை உலகம் முழுவதும் முதல் நாளில் வசூலித்ததால் கிடைத்துள்ளது. இவ்வாறு ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை லியோ படம் முந்திவிட்டது.

இதை வைத்தே தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர். அதுமட்டுமல்ல இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தாலும், படம் தாறுமாறாக வசூலின் பட்டையை கிளப்புகிறது. நாளுக்கு நாள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்களின் ஆர்வம் அதிகமாகி கொண்டே இருப்பதால் படத்தின் வசூல் நேற்றைய விட இரண்டாம் நாளான இன்று இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

- Advertisement -

Trending News