கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமாரின் 5 வெற்றிப் படங்கள்.. ஆல் டைம் பேவரிட் ஆன நாட்டாமை

ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் திறம்பட நடிக்கக் கூடியவர் சரத்குமார். இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பின் வெளியான சிறந்த 5 படங்களை பார்க்கலாம்.

சேரன் பாண்டியன் : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான சேரன் பாண்டியன் என்ற படத்தில் சரத்குமார், ஆனந்த்பாபு, விஜயகுமார், மஞ்சுளா, நாகேஷ், ஸ்ரீஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

பேண்ட் மாஸ்டர் : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான பேண்ட் மாஸ்டர் படத்தில் சரத்குமார், ஹீரா, ரஞ்சிதா, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இப்போது வேலை பார்க்கும் சரத்குமார், அமைச்சரின் மகளான கீதாவை காதலிக்கிறார்.

நாட்டாமை : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994இல் வெளியான படம் நாட்டாமை. இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் குஷ்பு, மீனா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போதும் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பு செய்தால் குடும்பத்துடன் பார்க்கும் ரசிகர்கள் உள்ளனர்.

நட்புக்காக : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1998 இல் வெளியான திரைப்படம் நட்புக்காக. இப்படத்திலும் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சிம்ரன், விஜயகுமார், மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நட்பின் புனிதத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சமுத்திரம் : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2001 இல் வெளியான திரைப்படம் சமுத்திரம். இப்படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ், மணிவண்ணன், கவுண்டமணி, அபிராமி, சிந்துமேனன், மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர். தங்கைக்காக எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கும் மூன்று அண்ணன்களின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -