உயிர் பயத்தை காட்டி மிரளவிட்ட 5 பேய் படங்கள்.. 2012-ல் உலகை உலுக்கிய திகில் மூவி

சினிமா ரசிகர்கள் பலருக்கும் த்ரில்லர், சஸ்பென்ஸ் நிறைந்த  பார்க்க ரொம்ப பிடிக்கும். இதில் சிலர் பேய் கதைகளை ரொம்பவே விரும்பி பார்ப்பார்கள். யாரும் இல்லாத நேரங்களில் இந்த படங்களை தனியாக பார்ப்பதை பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட ரசிகர்கள் கூட தனியாக பார்க்க முடியாத திகில் படங்களும் உண்டு. தனியாக பார்க்க முடியாத 5 பேய் படங்கள்,

டூத் ஃபேரி: இந்த படம் 30 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சம்பவத்தோடு தொடங்குகிறது. பெரியவர் முதல் சிறியவர்கள் வரை உள்ள ஒரு குடும்பம் தங்களது பண்ணை வீட்டில் வந்து குடியிருக்கிறார்கள். அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் குடும்பத்தில் சண்டை வந்து பிரியும் நிலை வருகிறது. இதற்கெல்லாம் காரணம் டூத் ஃபேரி என தெரிந்து கொள்ளும் நேரத்தில் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளை வேட்டையாட தொடங்கியிருக்கிறாள். பரந்து விரிந்த நிலப்பரப்பை மையமாக கொண்டு திகில் காட்சிகளை எடுத்திருப்பார்கள்.

Also Read: நெஞ்சை உரையவைக்கும் திகில் கெளப்பும் 8 பேய்கள தெரியுமா!!!!!

சாட்டன் -ஐ ரசிம்: இஸ்தான்புல்லில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்த சாலிஹ் என்னும் மாணவன் மந்திரங்களின் மேல் அதிக ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான் . இந்த ஆர்வம் அதிகமாகி நிறைய மந்திர செயல்களில் ஈடுபட்டு, சாத்தான்கள் இவனையும் இவனுடன் கூட இருந்த நண்பனையும் தொந்தரவு செய்வது தான் இந்த படத்தின் கதை.

லிவிட்: காட்டேரிகளை மைய்யமாக கொண்ட கதை இது. நர்சிங் படிக்க செல்லும் மாணவி ஒரு வீட்டில் தங்க சுரங்கம் இருப்பதை தெரிந்து கொண்டு தன் காதலனுக்கு தகவல் கொடுக்கிறாள். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த தங்கத்தை எடுக்க முற்படும் போது காட்டேரியிடம் சிக்கி கொள்வது தான் இந்த படத்தின் கதை.

Also Read: பீதியை கிளப்பி நடுங்க வைத்த 6 திகில் படங்கள்.. அரண்டு போன ரசிகர்கள்

கொஸ்டின் மார்க்: கல்லூரி மாணவர்கள் சிலர் விடுமுறை கொண்டாடத்திற்க்காக நண்பன் ஒருவனுக்கு சொந்தமான பங்களாவில் தங்குகிறார்கள். அங்கு பக்கத்தில் உள்ள காடுகளில் ஆவணப்படம் எடுக்க செல்லும் அவர்களின் கார் சாவி தொலைகிறது. தப்பிக்க வேறு வழியில்லாமல் அங்கு நடக்கும் திகில் சம்பவங்களை எதிர் கொள்கிறார்கள்.

த குயின் ஆப் பிளாக் மேஜிக்: அனாதை இல்லத்தில் வளர்ந்த நண்பர்கள் சிலர் தங்களை வளர்த்தவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அங்கு அவரை காண செல்கிறார்கள். அந்த அனாதை இல்லத்தில் குழந்தைகளை வைத்து சூனியம் செய்யப்படுவதை கண்டறிகிறார்கள், அப்போது அவர்களை சுற்றி நடக்கும் மர்மம் தான் இந்த படம்.

Also Read: சிறுவயதில் நம்மளை மிரட்டிய 8 பேய் படங்கள்.. இன்று வரை 13னை பார்த்து அலறும் மக்கள்

- Advertisement -