2023ல் வசூல் வேட்டையாடிய டாப் 5 மூவிஸ்.. 72 வயதிலும் நான்தான் No.1-ன்னு நிரூபித்த ரஜினி

2023 Top 5 Highest Collection Movies: 2023 ஆம் ஆண்டின் வருடத்தின் இறுதியில் இருப்பதால், அடுத்த மாதம் புத்தாண்டு துவங்கப் போகிறது. இதனால் சோசியல் மீடியாவில் இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய டாப் 5 படங்கள் எவை என்பது வெளியாகி ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்த லிஸ்டில் ரஜினி 72 வயதிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்திருப்பதால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர். இந்த லிஸ்டில் 5-வது இடத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் தான் இருக்கிறது. இந்த படம் உலக அளவில் 200.57 கோடியை வசூலித்து இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் லிஸ்டில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக 4-வது இடத்தில் தளபதி விஜய்யின் வாரிசு படம் உள்ளது. வம்சி இயக்கத்தில் பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியான இந்த படத்தில், விஜய்யை ஒரு மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல் செண்டிமெண்ட் நடிகராகவும் பார்க்க முடிந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 302.42 கோடியை வசூலித்தது.

Also read: முக்கிய நாளை குறி வைக்கும் ஐஸ்வர்யா, லோகேஷ்.. சிக்காமல் ஓடி ஒளியும் சூப்பர் ஸ்டாரின் ஃபிளாஷ்பேக்

2023 அதிக வசூலை ஈட்டிய டாப் 5 படங்கள்

3-வது இடம் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்திற்கு தான் கிடைத்தது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியானது. ஆனா இரண்டாம் பாகத்தை விட முதல் பகத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகம் மட்டும் உலக அளவில் 500 கோடி வசூலை வாரி குவித்தது.

2-வது இடத்தில் தளபதி விஜய்யின் லியோ படம் தான் இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் 560 கோடியை ஒட்டுமொத்தமாக வசூலித்தது. முதல் வார முடிவில் மட்டும் உலக அளவில் 461 கோடியை வசூலித்ததாக பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மாஸ் காட்டியது.

முதலிடம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் இருக்கிறது. இந்த படம் ஒட்டுமொத்தமாக 640 கோடியை வசூலித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் 525 கோடியை வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Also read: ஜெயிலர் கலெக்ஷனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. இரண்டே வாரத்தில் மொத்த ஆட்டத்தையும் க்ளோஸ் செய்த முத்துவேல்