5 இயக்குனர்களை அடையாளம் காண வைத்த சூப்பர் ஹிட் படங்கள்.. மெய்சிலிர்த்து அஜித் கொடுத்த பரிசு

சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்கள் ஆவது என்பதெல்லாம் மிகப் பெரிய சாதனையே. இப்போதெல்லாம் உதவி இயக்குனர்களாக வாய்ப்பு கிடைப்பது கூட கடினமாகி விட்டது. பல வருடங்களாக இயக்குனர்களாக இருந்தாலும் ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்க முடியாமல் நிறைய பேர் திணறி வருகின்றனர். இதில் சிலருக்கு தான் தங்களுடைய முதல் படமே ஒரு அடையாளத்தை வாங்கி கொடுத்து விடுகிறது.

எஸ். ஜே. சூர்யா: ஆசை படத்தில் உதவி இயக்குனராக இருந்த போதே அஜித்துக்கு வாலி பட கதையை சொல்லிவிட்டார் எஸ். ஜே. சூர்யா. அஜித் அவரின் மீதும் அந்த கதையின் மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். வாலி படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. வெற்றிக் கொண்டாட்டமாக அஜித், எஸ். ஜே. சூர்யாவுக்கு மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்திருக்கிறார்.

Also Read: சூரி பயந்த மாதிரியே நடந்துவிட்டது.. இதுக்கு ஏன் என்கிட்ட வந்தீங்க வெற்றிமாறன்

வெற்றிமாறன்: வெற்றிமாறனுக்கு பொல்லாதவன் திரைப்படம் முதல் படம் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. ஒரு பைக்கை வைத்து இரண்டரை மணி நேர கதையை சொல்லியிருந்தார். 2007ல் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமானது. வெற்றிமாறன் இப்போது கோலிவுட்டின் அசைக்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்.

ஹெச் வினோத்: நடிகர் அஜித்குமாரின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் ஹெச் வினோத்துக்கு சதுரங்க வேட்டை தான் முதல் திரைப்படம். அப்போது ட்ரெண்டிங்கில் இருந்த ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் போன்ற ஏமாற்று வேலைகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார். இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

Also Read: முடிவுக்கு வந்த அண்ணன், தம்பி உறவு.. காசு விஷயத்தால் கரார் காட்டியதால் அஜித் செய்யப்போகும் காரியம்

லோகேஷ் கனகராஜ்: இன்றைய சென்சேஷனல் இயக்குனராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். சினிமாவில் ஒரு இயக்குனர் 50 படங்களில் வாங்க வேண்டிய பெயரை கைதி என்னும் ஒரு படத்திலேயே வாங்கிவிட்டார் லோகேஷ். கைதி படத்தின் வெற்றி காரணமாக கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான விஜய் மற்றும் கமலஹாசனின் படவாய்ப்புகளும் இவரை தேடி வந்தது.

பிரதீப் ரங்கநாதன்: கோலிவுட்டின் ட்ரெண்டிங் இயக்குனராக மாறியிருக்கிறார் பிரதீப். இவரை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். லவ் டுடே என்னும் ஒரு படத்தின் மூலம் மொத்த சினிமா ரசிகர்களையும் தன்னுடைய வசம் கொண்டு வந்துவிட்டார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன இரண்டு வாரங்களில் வசூலில் 50 கோடியை எட்டிவிட்டது.

Also Read: கெஞ்சி பட வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர்.. ஒரே படத்தின் வெற்றியால் எகிறிய பிரதீப் மார்க்கெட்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -