இந்த 5 பேர் இல்லாமல் பெரிய பட்ஜெட் படம் வெளிவருவதில்லை.. இயக்கத்தை தூக்கிப்போட்டு நடிகராக ரவுண்டு கட்டும் GVM

Top 5 Celebrities in Big Budget Film: சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமே படத்திற்கு முக்கியமல்ல, ஒரு சில ஸ்ட்ராங்கான கேரக்டர்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும். அப்படிதான் இந்த ஐந்து பேர் இல்லாமல் பெரிய பட்ஜெட் படங்கள் சமீப காலமாக வெளிவருவதில்லை. அதிலும் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

சமுத்திரகனி: தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களை இயக்கி இயக்குனராக பரீட்சைமான சமுத்திரக்கனி, இப்போது படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். சாட்டை, அப்பா, வேலையில்லா பட்டதாரி, விசாரணை, அம்மா கணக்கு போன்ற தரமான கதைக்களங்களில் சமுத்திரக்கனி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிகாட்டியவர்.

அதுவும் பிளாக் பிஸ்டர் ஹிட் அடித்த ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரனின் மாமாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீப காலமாகவே இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நிச்சயம் இவருக்கு ஒரு கேரக்டரை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இப்போது இவர் படங்களை இயக்குவதை முற்றிலுமாக தவிர்த்து நிறைய படங்களில் கமிட் ஆகி நடித்த வருகிறார்.

எஸ்ஜே சூர்யா: அஜித்தின் ஆசை, விஜய்யின் குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா ‘நியூ’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து அதன் பின்பு குணச்சித்திர வேடங்களில் நிறைய படங்களில் நடித்திருந்தார். அதிலும் மெர்சல், டான், வாரிசு போன்ற ஹிட் படங்களில் இவருடைய நடிப்பு மிக முக்கியமாக இருந்தது.

சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் ஜாக்கி பாண்டி, மதன் பாண்டி என்ற இரண்டு வேடத்தில் எஸ்ஜே சூர்யா மிரட்டிவிட்டார். சொல்லப்போனால் இந்த படம் இவருக்காகவே ஓடியது, இதில் கதாநாயகனாக நடித்த விஷாலை எல்லாம் எஸ்ஜே சூர்யா தூக்கி சாப்பிட்டு விட்டார்.

பகத் பாசில்: மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த பகத் பாசில் கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட்டை ஆக்கிரமிக்கிறார். இவர் கமலுக்கு இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் அமர் ஏஜென்டாக நடித்து அசத்தினார். அதுமட்டுமல்ல மாமன்னன் படத்தில் ரத்தினவேல் கேரக்டரில் வில்லனாக மிரட்டினார். தற்போது வரும் டாப் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களில் எல்லாம் நடிப்பு அரக்கனான பகத் பாசிலுக்கும் ஒரு கேரக்டரை ஒதுக்கி விடுகின்றனர்.

சுனில்: தெலுங்கு நடிகரான சுனில் வர்மா தமிழிலும் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். இதுவரை 180 படங்களில் நடித்திருக்கும் சுனில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தோன்றி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இப்போது அவர் குணச்சித்திர வேடங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ‘பிளாஸ்ட் மோகன்’ கேரக்டர் இவருக்கு கச்சிதமாக பொருந்தியது. இவரால் மட்டுமே இந்த கேரக்டரில் நடிக்க முடியும் என்றும் ரசிகர்களிடம் கை தட்டுகளை அள்ளினார்.

கௌதம் வாசுதேவ் மேனன்: காதல் திரைப்படங்களை அனுபவித்து இயக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே தொடங்கி வெந்து தணிந்தது காடு படம் வரை பல தரமான படங்களை கொடுத்த இவர் ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் இப்போது இயக்குவதை தூக்கி போட்டுவிட்டு நடிகராக ரவுண்டு கட்டுகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தில் அரசியல்வாதியாக நெகட்டிவ் கேரக்டரில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை காட்டி மிரட்டி விட்டார். விடுதலை படத்திலும் டெரர் போலீசாக நடித்திருந்தார். இது மட்டுமல்ல விஜய்யின் லியோ படத்திலும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீப காலமாக வெளியாகும் டாப் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களில் இவருடைய பெயர் தான் முதலில் எழுதப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்