இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற முதல் 5 தமிழ் படங்கள்.. வெள்ளி விழா கொண்டாடிய ரஜினி

முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை வாரி குவித்தது. அதில் எத்தனையோ படங்கள் இருந்தாலும் தற்போது அதனுடைய படங்களில் இந்தியளவில் வெற்றி பெற்ற முதல் ஐந்து தமிழ் படங்களின் கலெக்ஷன்களை மட்டும் நாம் பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன்: கடந்த வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் ராசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியானது. இதனுடைய தொடர்ச்சி கடந்த வாரம் இரண்டாம் பாகம் வெளிவந்தது. ஆனால் முதல் பாகமே படத்தின் பட்ஜெட்டை வசூலித்து. அதிக லாபம் ஈட்டும் படமாக மாற்றியுள்ளது. இதனால் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 334 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

Also read: புலிகளின் வேட்டைக்கு தயாரான சூழ்ச்சிக்காரர்கள்.. பரபரப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

விக்ரம்: கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த படமாக ரசிகர்களிடம் இருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸில் இந்திய அளவில் 300 கோடி வசூலை தாண்டி பெரிய சாதனை படைத்த படமாக ஆனது.

2.0: சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு 2.0 திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்தார்கள். இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பல பாராட்டுகளை பெற்றது. இப்படம் இந்தியாவில் 205 கோடி வசூல் சாதனையை பெற்றது.

Also read: கமல் கொடுத்த தைரியத்தால் வந்த தலைக்கணம்.. சூப்பர் ஸ்டாரை இயக்க கண்டிஷன் போட்ட லோகேஷ்

கபாலி: பா. ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு கபாலி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் மற்றும் பலர் நடித்தார்கள். இப்படம் இந்திய அளவில் 200 கோடி வசூலை தாண்டியது. அத்துடன் இந்த படம் தான் கடைசியாக 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கண்ட படமாக இருக்கிறது.

எந்திரன்: சங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் எந்திரன் திரைப்படம் வெளிவந்தது. இவருடன் ஐஸ்வர்யா ராய், சந்தானம் மற்றும் கருணாஸ் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் 150 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடியது. இது இந்திய அளவில் பாக்ஸ் ஆபீசில் 250 கோடி வசூலை குவித்தது.

Also read: பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் ரஜினி.. காட்டமாக விமர்சித்த பூ நடிகை, விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சனை

- Advertisement -