அதிக பாடல்கள் பாடியதால் முதல் 4 இடத்தை பிடித்த ஹீரோக்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய 2 நடிகர்கள்

Top 4 Tamil Actors for Singing Most Songs: சினிமாவில் தடம் பதிக்கும் நடிகர்கள் அடுத்தடுத்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு பாடலாசிரியராகவும், பாடுபவராகவும் இசையமைப்பாளராகவும் பல்வேறு அவதாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர்கள் பாடுவது என்பது தேவையற்ற வேலை என்ற போதும், அது ஒரு விதமான பப்ளிசிட்டியை உருவாக்கி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது. அவ்வாறு பாடகர்களாக அவதாரம் எடுத்த 4 நடிகர்களை காணலாம்.

உலகநாயகன் கமலஹாசன்: சினிமாவில் இவரு தடம் பதிக்காத துறையே இல்லை என்னும் அளவுக்கு நடமாடும் சினிஅகராதியாக வலம் வருகிறார் கமல். 

இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கமல்,மன்மதன் அன்பு திரைப்படத்தில் தமிழில் இதுவரை யாரும் செய்திராத முயற்சியாக “நீல வானம், நீயும் நானும்” பாடல் முழுவதும் ரிவர்சிலேயே பாடி அற்புதம் செய்திருப்பார்.

சிம்பு: தமிழ் சினிமாவில் விரல் மூலம் வித்தை காட்டும் இந்த வித்தகன்  நடிப்பை தாண்டி பாடகராகவும் இளம் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவராவார்.

லூசு பெண்ணே, காதல் வளர்த்தேன், எவன்டி உன்ன பெத்தான் போன்ற கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள சிம்புவை பாட வைக்க பலரும் கெஞ்சத்தான் செய்கிறார்கள். 

தன் வசீகரமான குரல் மூலம் பாடலின் உணர்வை இதயத்தில் உட்பகுத்தும் திறமை சிம்புவிற்கு உண்டு.

GOAT படத்தில் ஒரு பாடல் மட்டும் பாடியுள்ள விஜய்

விஜய்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவரது தாயாரின் ஊக்கத்தாலே பின்னணி பாடகர் ஆனார். கானா  பாடல்களை பாட ஆரம்பித்து இன்று வரை கிட்டத்தட்ட 32 பாடல்கள் பாடியுள்ளார். 

லியோ படத்தில் “நான் ரெடி தான் வரவா” என்று அரசியலில் குதித்துள்ள விஜய், தற்போது இவர் நடிக்கும் GOAT படத்திலும் பாடல் ஒன்று பாடியுள்ளாராம்.

தனுஷ்: தமிழ் சினிமாவில் பலரும் பொறாமைப்படும் வண்ணம் நடிகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து தயாரிப்பாளர், இயக்குனர் பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் தனுஷ்.

அனிருத் இசையில் ஒய் திஸ் கொலவெறி என்று ஆரம்பித்தவர் காதல், அம்மா சென்டிமென்ட், குத்து என பலவகையிலும் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தி உள்ளார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை