சமீபத்தில் ரீ என்ட்ரி கொடுத்த 4 குணச்சித்திர கதாபாத்திரங்கள்.. பல வருடங்கள் காணாமல் போன முரளியின் நண்பர்

ஒரு படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக அமைவது அந்த படத்தில் நடிக்கும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் தான். 80ஸ், 90ஸ் களில் குணச்சித்திர கதாபாத்திரங்களாக கலக்கிய பல நடிகர்கள் பலரை நீண்ட வருடங்களாக திரையில் பலரை பார்க்க முடியாமல் இருந்தது. அப்படி இருந்த நடிகர்களில் சிலர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்கள்.

சார்லி: இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய நடிகர் தான் சார்லி. இவர் இதுவரைக்கும் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். விஜய், அஜித், விஜயகாந்த், சரத்குமார் படங்களில் காமெடியனாக நடித்த இவர் இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Also Read: நடிகர் சார்லி நீங்கள் அறிந்த, அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள். ஒரு பார்வை.

ஜி எம் சுந்தர்: இயக்குனர் கே பாலசந்தரின் புன்னகை மன்னன் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜி எம் சுந்தர் உலக நாயகன் கமலஹாசனின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சத்யா போன்ற படங்களில் நடித்த இவர் ஹீரோவாகவும் நடித்தார். சில வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் மீண்டும் காதலும் கடந்து போகும் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

ரமேஷ் கண்ணா: ரமேஷ் கண்ணா நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். அஜித், விஜய், கார்த்திக், பார்த்திபன் போன்றவர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து கொண்டிருந்த இவர் அதன்பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த இவர், அஜித்தின் வீரம் படத்திற்கு மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

Also Read: ரமேஷ் கண்ணா நடிகர் மட்டும் இல்ல இயக்குனரும் கூட.. அதுவும் அஜித்தை வைத்தே தாறுமாறா எடுத்துருக்காருபா

நிழல்கள் ரவி: 1980 ஆம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானவர் நிழல்கள் ரவி. கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் வில்லனாக, ஹீரோவாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கண்டேன் காதலை, சிங்கம், காவலன், ஒஸ்தி, வணக்கம் சென்னை, போன்ற படங்களில் நடித்தார். ரீ என்ட்ரியில் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார்.

Also Read: நிழல்கள் ரவி பயமுறுத்திய 5 பேய் படங்கள்.. பேய் மாமா என பதறிய சின்னஞ்சிறுசுகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்