டாப் 10 தமிழ் நடிகைகள் வாங்கும் சம்பளம்.. நயன்தாராவை ஓரம் கட்டிய 2 ஹீரோயின்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் டாப் 10 பணக்கார நடிகைகள். நடிகைகளுக்கு மார்க்கெட் உள்ளபோதே சம்பளத்தை உயர்த்தினால் மட்டுமே சம்பாதிக்க முடியும். ஏனென்றால் கிட்டதட்ட 10 வருடங்கள் ஒரு நடிகை கோலிவுட் வட்டாரத்தில் நிலையாக இருக்க முடியும். அதற்குப்பின் டாப் லிஸ்ட் என்பதை மறந்துவிட வேண்டியது தான். ஹீரோக்கள் அப்படி இல்லை கிட்டத்தட்ட முப்பது, நாற்பது வருடங்கள் ஆனாலும் நிலையாக நின்று சாதித்துக் காட்டுவார்கள்.

லக்ஷ்மி மேனன்:  கும்கி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 15. தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 45 லட்சம் சம்பளம் பெற்று உள்ளார்.

ஹன்சிகா மோத்வானி: குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.  தமிழில் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹன்சிகா கதாநாயகியாக அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

தமன்னா: இவர் தமிழில் கேடி என்ற திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானார். விஜய், அஜித், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக அழகான நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் ஒரு படத்துக்கு 2 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

காஜல் அகர்வால்: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் துப்பாக்கி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இவர் ஒரு படத்துக்கு 2 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்.

ஸ்ரேயா: தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் சமீபத்தில் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும், இவர் ஒரு படத்திற்கு 2 கோடி வரை சம்பளம் பெற்று உள்ளார்.

சமந்தா: தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஒரு படத்துக்கு 3 கோடி சம்பளம் பெறுகிறார். திரைப்படங்களை தொடர்ந்து விளம்பரப் படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

திரிஷா: பல வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. இவர் ஒரு படத்திற்கு 3 கோடி சம்பளமாக பெறுகிறார்.  அதைத் தவிர அதைத்தவிர விளம்பரப் படங்களுக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். இன்றளவும் அதே இளமையுடன் ஜொலித்து வருகிறார்.

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர்.  இவர் சோலோவாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகில் கதாநாயகர்களுக்கு இணையான வரவேற்பை பெற்றுள்ளது. இன்றும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் கொண்டு வருகிறார்.  இவர் ஒரு படத்திற்கு 3-4 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா: ராஷ்மிகா மந்தனா சுல்தான் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 4 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

அனுஷ்கா ஷெட்டி: வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் இவரை மிஞ்ச முடியாது. பல வரலாற்று திரைப்படங்களில் நடித்து தனது திறமையை காட்டியவர் அனுஷ்கா ஷெட்டி. அதில் பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இவர் “இஞ்சி இடுப்பழகி” படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி நடித்ததன் மூலம் மிகுந்த பாராட்டுகளையும் பெற்றார். இன்று வரை தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

anushka-nayanthara-cinemapettai
anushka-nayanthara-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்