வாரி இறைக்கும் 2024-25ன் முக்கியமான பத்து பட்ஜெட்.. அரக்கப்பறக்க தெரிந்து ஓடும் எதிர்க்கட்சிகள்

Top 10 features of Tamilnadu Budget 2024-25: தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று முதல் கூட்டமே காரசாரமான விவாதத்துடன் கவர்னரின் கிடுக்குப்படியான உரையுடன் ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து இன்று பிப்ரவரி 19 தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் நிதித்துறை பட்ஜெட்டை சமர்ப்பித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

“தடைகளைத் தாண்டி வெற்றியை நோக்கி” என்ற லோகோவுடன் இனிதே ஆரம்பித்தது. 2024-25 ஆண்டுக்கான நிதி பட்ஜெட் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ 1.95 லட்சம் கோடி,வரி அல்லாத வருவாய் ரூ 30,728 கோடி, மத்திய அரசின் வருமான பகிர்வு ரூ 49,755 கோடி.

Also read: தமிழக அரசு வெளியிட்ட 2024-ன் பொது விடுமுறை பட்டியல்.. உச்சி குளிர வைத்த ஜனவரி மாதம்

  • இல்லம் தேடி கல்விக்கு 100 கோடி உட்பட பள்ளி கல்வித்துறைக்கு மட்டுமே ரூ 44, 042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்பதாக தகவல். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரியில் பெண்களின் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் இதற்காக ரூ 370 கோடியும்  ஒதுக்கப்பட்டுள்ளது.
  • “தமிழ் புதல்வன்”  மற்றும் “நான் முதல்வர்” திட்டத்திற்கு ரூ360 மற்றும் ரூ 200 கோடி நிதி
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப போவதாக உறுதி
  •  “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும் என தகவல்
  • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் டைட்டல் மற்றும் சிப்காட் தொழில் பூங்கா  அமைக்க நிதி ஒதுக்கீடு. விருதுநகர் மற்றும் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
  •  சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு,  மதுரை கோவை போன்றவற்றிற்கு மத்திய அரசின் ஒப்புதலோடு மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படுதல்
  • ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ 7890 கோடி நிதி இதன்மூலம் 40 லட்சம் மக்கள் பயன்பெறுவர். மழை வெள்ளத்தின் போது பாதிப்பை குறைப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், வானிலையை துல்லியமாக கணிக்க 2 டாப்ளர் புதிய ரேடார்கள் அமைக்கப்படும்.
  • திருச்சி திருவரும்பூர் பகுதியில் நவீன வசதிகளுடன் சிறைச்சாலை அமைப்பு

தேசிய சராசரியை விட பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என்றும் தமிழக பொருளாதாரம் சிறப்புடனையே இருக்கிறது என்றும் நிதி துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த ஆண்டு நிதி பட்ஜெட் எதிர்க்கட்சிகளை அசர வைத்து புதிய திட்டங்களுடன் அமர்க்களப்படுத்தி உள்ளது எனலாம்.

Also read: அப்பாவை மாதிரி இனி ஒரு விஏஓ கூட சாகக்கூடாதுன்னு நீதிபதியாகும் மார்சல்.. சரித்திரத்தை புரட்டிப்போட்ட நிஜக்கதை

Sharing Is Caring:

அதிகம் படித்தவை