சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உங்களுக்கு பேச தகுதியில்லை மூடிட்டு உட்காரு.. சும்மா கிடந்தவனை சொறிஞ்சு விட்ட சைக்கோ

Bigg Boss Season 7 Promo: விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒரு வாரத்தை மட்டுமே கடந்திருக்கும் நிலையில், 2-வது வாரத்தில் அனல் பறக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்று நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்திருக்கிறது. அதிலும் கோல்டன் ஸ்டாரை பெறவேண்டும் என போட்டியாளர்கள் தங்களை ஒரு நல்ல என்டர்டைனர் என்பதை பேசி நிரூபிக்க வேண்டும்.

இந்த டாஸ்கின் போதுதான் நிக்சன் மற்றும் பிரதீப் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக போட்டியாளர்களின் மத்தியில் சைக்கோ போல் நடந்து கொள்கிறார் என விமர்சிக்கப்படும் பிரதீப், சும்மா இல்லாமல் நிக்சன் தன்னை ஒரு என்டர்டைனர் என நிரூபித்துக் கொண்டிருக்கும் போது ஆடிக்காட்டு, பாடி காட்டுன்னு கிண்டலடித்திருக்கிறார்.

உனக்கெல்லாம் பேச தகுதியே இல்ல மூடிட்டு உட்காரு என்று நிக்சனைப் பார்த்து பிரதீப் சொன்னார். அதைக் கேட்டதும் வெறியேறிய நிக்சன், ‘என்ன பாத்து தகுதி இல்லைன்னு சொல்ல உனக்கு கொஞ்சம் கூட தகுதி இல்ல. பாட்டு பாடி உழைத்து இங்கு வந்திருக்கிறேன், ஆனா நீ இந்த நிகழ்ச்சியை வெளியில் நன்றாக பார்த்து தெரிந்து கொண்டு ஒரு ஸ்டேடர்ஜியுடன் கேவலமாக ஒரு கேம் ஆடிட்டு இருக்கிற, அப்படி கேவலமாக ஆட வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.

என்ன பாத்து பாடி காட்டு, ஆடி காட்டு என எல்லாம் சொல்லாத. உனக்கு அதெல்லாம் வரலைனா மூடிட்டு உட்காரு’ என்று பிரதீப்புக்கு பதிலடி கொடுத்தார். இவர்களது சண்டையால் பிக் பாஸ் வீடே ரணகளமானது, மற்ற போட்டியாளர்கள் எல்லாம் கப்பு சுப்புன்னு அப்படியே சிலை போல திகைத்து நிற்கின்றனர்.

நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. அதிலும் இப்போது நிக்சன் மற்றும் பிரதீப் இருவரும் காரசாரமாக சண்டை போடுவது நிகழ்ச்சியை மேலும் சூடேற்றி விட்டது. அது மட்டுமல்ல இந்த சீசனில் நிதானத்துடன் விளையாடும் நிக்சன் நிச்சயம் பைனல்ஸ் வரை சென்று டைட்டிலை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ இதோ!

- Advertisement -

Trending News