எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி தமிழக முதல்வர்.. துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகழாரம்!

அதிமுக சார்பில் கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள்,

‘ஜெயலலிதாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்’ என்று புகழ்ந்து பேசினார்.

மேலும் தேர்தல் நேரத்தில் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மறந்து விடாமல் அதை செயல்படுத்த கட்சிதான் அதிமுக.

அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்வதால் இந்தியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

எனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் 73 சீர் வரிசையுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்களின் சொந்த செலவில் நடத்தப்பட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்