தென்னிந்திய படங்களை குறிவைக்கும் பாலிவுட் நடிகர்கள்.. அதில் சிக்காத ஒரே நடிகர்

சமீபகாலமாக தென் இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் அனைத்தும் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் சிறந்த கதை அமைப்பைக் கொண்டு உருவாகி வருகிறது. அப்படி பலரையும் கவர்ந்த திரைப்படங்கள் அனைத்தும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் அனைத்தும் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. சிறந்த கதைக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்த விக்ரம் வேதா, அருவி போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தற்போது ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி இந்தி நடிகர்கள் தற்போது தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் மிகவும் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை கவர்ந்த பல கதைகளை படமாக்க இந்தி தயாரிப்பாளர்கள் ஆசைப்படுகின்றனர்.

இது இப்படி இருக்க பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ஷாருக்கான் இதுபோன்ற எந்த ரீமேக் திரைப்படங்களிலும் நடிப்பதில்லை. முழு பாலிவுட்டும் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்யும் போது ஷாருக்கான் மட்டும் அவருக்காக உருவாக்கப்பட்ட படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. மேலும் அவருடன் பல தமிழ் நடிகர்கள் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் தமிழ் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. மேலும் அவர் கமலுடன் சேர்ந்து ஹேராம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

என்னதான் அவர் தென்னிந்திய நடிகர்கள் உடன் நட்பு பாராட்டி வந்தாலும் தனக்கே உரிய பாணியில் நடிப்பதையே அவர் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் மற்ற நடிகர்கள் நடித்த படங்களில் நடிக்காமல் தனக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் மட்டுமே அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.