டிக் டாக் இலக்கியாவின் ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ஏ சான்றிதழ்! கனவு நிறைவேறியதாக பெருமிதம்!

டிக் டாக் செயலி மூலம் தன்னுடைய கவர்ச்சி நடன வீடியோக்களால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் டிக் டாக் இலக்கியா. இவரை கதாநாயகியாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இந்த படத்தை எட்டு பேர் கொண்ட தணிக்கை குழு, அதனைத் தணிக்கை செய்து ஒருவழியாக ‘ஏ சான்றிதழ்’ வழங்கியுள்ளது. எனவே விரைவில் இந்த படம் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்த அருண்குமார் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்ததாகவும், அதன் பிறகு படத்தில் ஹீரோவாக நடிக்க யாரும் முன்வராததால், அவரே கதாநாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காகவே அவர் கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்று, அதன்பிறகு கதாநாயகியாக டிக் டாக் இலக்கியாவை தேர்ந்தெடுத்துள்ளார்.

டிக் டாக் இலக்கியாவிற்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதில் இவ்வளவு சிரமம் இருப்பது சினிமாவில், இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் தெரிய வந்துள்ளதாம். இந்த படத்தின் மூலம் ஒருவழியாக தனது கனவு நிறைவேறி உள்ளதாக இலக்கியா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

மேலும் கூடிய விரைவில் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டுமென்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் டிக் டாக் இலக்கியா தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கதிகலங்க வைத்த நிலையில், ‘நீ சுடத்தான் வந்தியா’ படம் எப்போது வெளியாகும் என்று இளவட்டம் ஏங்கி தவிக்கிறது.

nee-sudatha-vanthiya
nee-sudatha-vanthiya

இந்தப் படத்தின் மூலம் டிக் டாக் இலக்கியாவிற்கு எக்கச்சக்கமான விமர்சனங்கள் கிளம்பியது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்களில் பலவிதமான சீண்டகளுக்கும் ஆளானாலும் படத்திற்கான இலக்கியாவின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என படக்குழுவினர் டிக் டாக் இலக்கியாவை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இந்தப் படத்தை ஆல்பின் மீடியா தயாரித்து துரைசாமி இயக்கியுள்ளார். எனவே டிக் டாக் இலக்கியா கதாநாயகியாக நடித்த ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்