தங்கத் தட்டில் சாப்பிட்ட தியாகராஜ பாகவதர்.. ஒரே தவறால் புகழை இழந்து மரணித்த பரிதாபம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர் தன்னுடைய இறுதி காலத்தில் பல கஷ்டங்களுக்கு ஆளாகி மரணமடைந்தார். வெறும் 14 படங்கள் மட்டுமே நடித்திருந்த அவர் புகழின் உச்சியில் இருந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஆனால் அதுதான் உண்மை. அந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகராகவும் இவர் இருந்தார். சுருக்கமாகச் சொன்னால் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருந்த இவர் தங்கத்தட்டில் தான் சாப்பிடுவாராம். அப்படிப்பட்ட தியாகராஜ பாகவதர் தன்னுடைய இறுதி வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் அந்த ஒரே ஒரு கொலை தான். அந்த காலத்தில் மஞ்சள் பத்திரிக்கை என்பது மிகவும் பிரபலமான ஒன்று. இப்போது சினிமா கிசுகிசுக்கள் வெளிவருவது போன்று அப்போது அந்த பத்திரிக்கையில் பிரபலங்கள் பற்றி பல விஷயங்களும் வெளிவருமாம்.

அதில் அடிக்கடி தியாகராஜ பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் போன்றவர்களை பற்றி பல அவதூறு செய்திகளை பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் எழுதி இருக்கிறார். அதாவது தியாகராஜ பாகவதர் இரவு நேரத்தில் அங்கு சென்றார். எம் எஸ் கிருஷ்ணனுக்கு இந்த பழக்கம் இருக்கிறது என்று தொடர்ந்து அவர்கள் இருவர் செய்யும் தப்பை பற்றி அந்த பத்திரிகையில் எழுதி வந்துள்ளார்.

இதனால் கடுப்பான அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாள் லட்சுமி காந்தனை போட்டு தள்ளி விட்டனர். மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் இருவருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து விடுதலையான தியாகராஜ பாகவதருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்த வாய்ப்புகளும் அப்பா, அண்ணன் போன்ற கதாபாத்திரமாக இருந்ததால் அவர் அதை ஏற்க விரும்பவில்லை. அதனால் அவர் ஆன்மீகம் பக்கம் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

கோவில்களில் கச்சேரி நடத்துவதன் மூலம் சம்பாதித்து எளிமையாக வாழ்ந்து வந்தார். சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சில தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அவர் உடல்நிலை படுமோசமாக மாறியது. அதனால் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் மரணித்தார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக எட்டாத உயரத்தில் இருந்த அவர் ஒரே ஒரு தவறினால் ஒட்டுமொத்த புகழையும் இழந்தது பலரையும் வேதனையடைய செய்துள்ளது.