துப்பாக்கி படத்தின் பார்ட் 2 தான் பீஸ்ட்.. நெல்சனின் புத்திசாலித்தனத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் ரவிச்சந்திரன் பீஸ்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தளபதியின் 65வது படமான பீஸ்ட் என்ற படத்தின் பெயரை மிரட்டலாக இருந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் தளபதியின் பிறந்த நாள் அன்று வெளியிட்டது. அதில் தளபதியின் கையில் துப்பாக்கியுடன் இருந்தார். அவர் பின்னால் புகை குண்டு வீசப்பட்டு புகைந்து கொண்டிருந்தது. பொங்கலுக்கு வெளியாக உள்ள பீஸ்ட் படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படம் முழுவதும் ரத்தக்கரை படிந்த வெள்ளை சட்டையில் தளபதி உள்ளார். ஷாப்பிங் மாலில் ஊடுருவிய தீவிரவாதிகளை ராணுவ வீரரான விஜய் மற்றும் அவருடன் பணியாற்றும் சக வீரர்களுடன் போராடி மக்களை காப்பாற்றுவதே பீஸ்ட் படத்தின் கதை. இதேபோல் துப்பாக்கி படத்தில் தளபதி விஜய் ராணுவ வீரர் ஜெகதீஷ் ஆக தீவிரவாதிகளை அழிப்பார்.

beast-second-look-cinemapettai
beast-second-look-cinemapettai

அதேபோல் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போல் வெளியாகியிருந்தது. இதனால் இப்படம் துப்பாக்கி பார்ட்-2 என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்