சிம்பு செய்த தவறால் கேன்சலான 3 படங்கள்.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் போடும் ஆட்டம்

சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது பத்து தல என்ற படத்தை ஒபேலி என். கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படம் இந்த மாதம் கடைசியில் வெளியாக இருக்கிறது. இது இவருடைய 48வது படமாகும்.

இதனை அடுத்து சிம்பு கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்கப் போவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்பு இவரின் வெற்றி படமான வெந்து தணிந்தது காடு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா இந்த படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

Also read: பல வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்-சிம்பு கூட்டணி.. கோடம்பாக்கத்தை பரபரப்பாகிய அப்டேட்

மேலும் இது இவருடைய 49, 50வது படம் என்பதால் அந்தப் படத்தை கண்டிப்பாக வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதனால் இவரின் வெற்றி படங்களை எடுத்து நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இதனால் இவருடைய ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இவர் இந்த படங்களை எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று கேன்சல் செய்து விட்டார். ஏனென்றால் இவர் இந்த படங்களில் அதிகமான சம்பளத்தை கேட்டிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர்கள் இவர் கேட்ட சம்பளத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இந்த படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

Also read: சிம்புவை வைத்து காய் நகர்த்தும் கமல்.. எதிர்பார்க்காத மெகா கூட்டணி.!

இவர் முன்னதாகவே ஷூட்டிங்க்கு சரியாக வருவதில்லை இதனால் படங்கள் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் படக்குழுவினர்கள் போராடுவதாக பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இதையெல்லாம் தாண்டி இப்பொழுது வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இப்பொழுது மறுபடியும் இந்த மாதிரி இவர் செய்வது ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுக்கிறது. அத்துடன் இவர் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஆட்டம் போடுகிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

இப்படி ஒரேடியாக புளியங்கொம்பு மேல் ஏறி உட்கார்ந்துகிட்டு கீழே இறங்கி வர மறுக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு 2 மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படங்களை எடுக்க ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் சிம்பு எதற்குமே ஒத்துழைப்பு கொடுக்காமல் சம்பளத்தை உயர்த்தி விட்டு முரண்டு பிடித்து கொண்டு இருக்கிறார்.

Also read: விஜய்க்கு சிம்பு கொடுத்த மாஸ் என்ட்ரி.. அதே சந்தோஷத்தை வாரிசு நடிகருக்கு திருப்பிக் கொடுத்த எஸ்டிஆர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்