இந்த வாரம் ஓடிடியில் வெளியான 3 படங்கள்.. ரீ என்ட்ரியில் கலக்கும் அமலாபால்

சமீபகாலமாக திரையரங்குகளை காட்டிலும் ஒடிடி நிறுவனங்கள் தான் தலைதூக்கியுள்ளது. கோவிட் தோற்று காலத்தில் வேகம் எடுத்த ஓடிடி நிறுவனங்கள் தற்போது அதிரடியாக செயல்பட்டு வருகிறது. மேலும் தயாரிப்பாளர்களும் பெரும்பாலும் ஓடிடியை தேர்வு செய்கிறார்கள்.

அதாவது படத்தை திரையரங்குகளில் வெளியிடும்போது படம் வெற்றி அடைந்தால் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஒருவேளை படம் தோல்வியை சந்தித்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான். ஆனால் ஓடிடியில் வெளியானால் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

அந்த வகையில் இந்த ஆண்டு 2022இல் இருந்த ஓடிடியில் பல படங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் ஆகஸ்ட் தொடக்கத்தில் விக்டிம், வட்டம், மாமனிதன் போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த வாரம் வெளியாகி உள்ள ஓடிடி படங்களை தற்போது பார்க்கலாம்.

காடவர் : அமலாபால், தயாரித்து நடித்திருக்கும் படம் காடவர். இப்படத்தில் போலீஸ் சர்ஜனாக அமலாபால் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்சினிமாவில் இப்படத்தின் மூலம் அமலாபால் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

 முழுப்படத்தையும் OTT-யில் பார்க்க

எமோஜி : மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஸ், மானசா சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் எமோஜி. இப்படம் எல்லா உணர்ச்சிகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் நேற்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானது.

முழுப்படத்தையும் OTT-யில் பார்க்க

டே ஷிஃப்ட் : ஜேஜே பெர்ரி இயக்கத்தில் ஜேமி ஃபாக்ஸ் நடித்துள்ள படம் டே ஷிஃப்ட். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து இருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 12 நேற்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருந்தது.

முழுப்படத்தையும் OTT-யில் பார்க்க

- Advertisement -