தமிழ் சினிமாவில் அதிக வெள்ளி விழா கொடுத்த 3 நடிகர்கள்.. எம்ஜிஆரை பின்னுக்கு தள்ளிய மும்மூர்த்திகள்

சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு ஹீரோக்கள் போட்டி போட்டு படங்களை வெற்றியடைய செய்கிறார்கள். அன்றைய காலத்தில் சின்னப்பா-கிட்டப்பாக்கள் தொடங்கி இன்றைக்கு விஜய்-அஜித் வரைக்கும் ஜோடி போட்டு மோதிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களில் நீண்ட காலம் தமிழ் சினிமாவில் நீயா நானா என்று போட்டி போட்டு முன்னேறிய ஜோடி தான் எம்ஜிஆர்-சிவாஜி.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரின் படங்களுமே வெற்றி நடை போட்டு கொடி கட்டி பறந்திருந்தார்கள். அப்பொழுது எம்ஜிஆர் அரசியலில் ஆர்வம் செலுத்தியதால் படங்களில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் இருந்த நிலையில் சிவாஜி அதிகமான படங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. அப்படி இவர் நடித்த படங்கள் மிகவும் வெற்றி படங்களாக ஆகி வெள்ளி விழா படமாக மாறியது.

Also read: வேறு ஒருவரை யோசிக்க முடியாத 8 பட்டங்கள்.. நடிகர் திலகம் முதல் சூப்பர் ஸ்டார் வரை

அத்துடன் இவருக்கு அடுத்து ரஜினி சினிமாவிற்குள் நுழைந்து அதிக படங்களை நடித்து வெற்றிவாகை சூடிக்கொண்டார். அப்பொழுது மக்கள் கவனம் இவர் பக்கம் திரும்பியது. இவருடைய நடிப்பு, ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து இவர் ஹிட் படங்களை கொடுத்ததால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தது.

அதன் பின் சிறு வயது முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து நடிப்பின் நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கமலஹாசன். இவருடைய எதார்த்தமான நடிப்பும் வித்தியாசமான கேரக்டரும் மக்களை அதிக அளவில் ஈர்த்தது. இப்படி தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை தொடர்ந்து சிவாஜி, ரஜினி, கமல் இவர்கள் மூவரும் வெறித்தனமான நடிப்பை வெளிக்காட்டியதால் இவர்கள் படங்கள் அதிகளவில் வெள்ளி விழா படமாக மாறியது.

Also read: எம்ஜிஆரை சுட்ட பின்பும் குறையாத மவுசு.. திரையுலகை ஆட்சி செய்த எம் ஆர் ராதாவின் கடைசி படம்

அத்துடன் எம்ஜிஆரை மிஞ்சும் அளவிற்கு இவர்கள் வளர்ந்து வந்தார்கள். இதனால் இவர் ஒரு படி பின்னே சென்று விட்டார் என்றே சொல்லலாம். ஆனாலும் இவருக்கு இருக்க ரசிகர்கள் இப்பொழுது வரை வேறு யாருக்கும் இருந்ததில்லை. அந்த காலத்து மக்களிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் உடனே அவர்கள் சொல்வது எம்ஜிஆர் தான்.

அது மட்டுமல்லாமல் இப்பொழுது வரை எம்ஜிஆர் பெயர் நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவர் அரசியலில் சேர்ந்ததாக மட்டும் இல்லாமல் அவர் படங்களில் எடுத்துக் கொண்ட கருத்துக்களும் அவர் கூறிய விஷயங்களும் தான் எப்பொழுதும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

Also read: எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை.. சூட்டிங் ஸ்பாட்டிலே தெனாவட்டு காட்டும் ஹீரோயின்

- Advertisement -