வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விக்ரம் பட ஏஜென்ட் போல விஜய்க்கு துரோகம் செய்யும் அந்த 100 பேர்.. பகிரங்கமாக குற்றம் சாட்டிய எஸ் ஏ சி

Actor Vijay: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் லியோ படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்கில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் எஸ்ஏசி விஜய்யிடம் இருக்கக்கூடிய 100 பேர் கொண்ட ஏஜென்ட் குரூப்பை பற்றியும் அவர்கள் பொய்யான தகவல்களை எவ்வாறு பரப்புகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கிறார். அதிர்ச்சியூட்டும் வகையில் விஜய் இடம் இருக்கும் அந்த குழுவில் தளபதியும் இருப்பதை அவரது தந்தை ஒப்புக்கொண்டார்.

உலகநாயகன் இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் எப்படி ஏஜென்ட் குரூப் இருந்து செயல்படுகிறதோ அதேபோலவே விஜய் இடமும் 100 பேர் கொண்ட ஏஜென்ட் குரூப் இருக்கிறது. ஆன்லைனில் தீவிரமாக செயல்படும் இந்த குரூப்பில் விஜய்யும் இருக்கிறார். இந்த குழுவினர் விஜய்க்கு வெளியில் நடப்பது எதுவும் தெரியாத ஒரு இரும்பு கோட்டைக்குள் வைத்து விட்டனர்.

இந்த ஏஜென்ட் குரூப் காலையில் ஏதாவது ஒரு பொய்யான செய்தியை உருவாக்கி பதிவிடுகின்றனர். அந்த குரூப்பில் இருக்கும் நூறு பேர் அந்த செய்தியை லைக் செய்து, ஷேர் செய்து ட்ரெண்டாக்கி விடுகின்றனர். விஜய்க்கும் இது எப்படியோ எட்டி விடும். அதை தான் அவர் உண்மை என்றும் நம்புகிறார். இவர்கள் எஸ்ஏசி- ஐ தான் அதிகமாக குறி வைக்கின்றனர்.

ஒரு பொய் 10 தடவை சொன்னால் உண்மையாகிவிடும். ஆனால் இவர்கள் நூறு தடவை அதை சொல்லி ஒரு பொய்யை உண்மையாகி விடுகிறார்கள். நடக்காத ஒரு விஷயத்தை உண்மை என்று விஜய்யை நம்ப வைப்பதற்காக, தவறான தகவல்கள் வேண்டும் என்று உருவாக்கப்பட்டு சோசியல் மீடியாவை பரபரப்பாக்குவது தான் இந்த துரோகிகளின் வேலை.

சீக்கிரம் இவர்கள் பிடியிலிருந்து விஜய் வெளிவர வேண்டும் என்று எஸ்ஏசி ஆதங்கப்படுகிறார். தன்னுடைய மகன் ஜோசப் விஜய்யை தவறாக வழி நடத்துவதை பார்க்க முடியாமல் எஸ்ஏசி இப்போது பொங்கி எழுகிறார்.

- Advertisement -

Trending News