அதிரடியாக வெளிவந்த இந்த வார பிக் பாஸ்-7ன் ஓட்டிங் லிஸ்ட்.. இந்த வேஸ்ட் பீஸ் வெளியே போறதில்ல தப்பே இல்ல

Bigg Boss Season 7 Voting List: மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 7ல் மக்களுக்கு பரிச்சயமான சின்னத்திரை பிரபலங்கள் அதிகம் இருக்கின்றனர். அத்துடன் இந்த சீசன் வெகு சீக்கிரமே சூடு பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் தொகுத்து வழங்கும் எபிசோடுகளை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

அது மட்டுமல்ல ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள். கடந்த வாரம் எலிமினேஷனில் இருந்து சீரியல் பிரபலம் நூழிலையில் எஸ்கேப் ஆகி விட்டார். வேறு வழி இல்லாமல் விஜய் வர்மாவை வெளியேற்றி விட்டனர். ஆனால் இந்த வாரம் வசமாக சிக்கிக் கொண்டார்.

11 பேர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றனர். இதில் பிரதீப் அதிக ஓட்டுகளை பெற்று மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் டாப் லிஸ்டில் இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நிக்சன், மணிகண்டன், விஷ்ணு, ஜோவிகா, அக்ஷயா, மாயா போன்றோர் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். கடைசி நான்கு இடத்தில் கூல் சுரேஷ், யுகேந்திரன், விக்ரம், வினுஷா உள்ளனர்.

இந்த வாரம் கண்ணம்மா சீரியல் கதாநாயகி வினுஷா வெளியேறப் போகிறார். இவர் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்றது மட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் 4 வாரம் ஆகியும் இன்னும் விளையாட ஆரம்பிக்காமல் இருக்கிறார். ‘நான் இப்படிதான்! என்னால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இங்கிருப்பவர்களுடன் ஜெல்லாக முடியும். புது இடத்தில் பழகுவது கொஞ்சம் டைம் எடுக்கும்’ என ஒரு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த வார பிக் பாஸ்-7ன் ஓட்டிங் லிஸ்ட்

bigg-boss-7-voting-list-1-cinemapettai
bigg-boss-7-voting-list-1-cinemapettai

பிக் பாஸ் விளையாட்டில் இதற்கெல்லாம் இடமில்லை. இவர் நான்கு வாரமாகவே சும்மாவே உட்கார்ந்து மிச்சர் தின்னுகிட்டு இருக்கார். இவர் செம ஸ்ட்ராங்கான கண்டஸ்டண்ட் என முதல் நாளில் பலரும் யூகித்தனர். ஆனால் அவர்களது நினைப்பெல்லாம் தப்பாயிருச்சு. இனிமேலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என இந்த வாரம் ரசிகர்கள் குறைந்த ஓட்டுகளை மட்டுமே அளித்துள்ளனர்..

இந்த வார பிக் பாஸ்-7ன் ஓட்டிங் லிஸ்ட்

bigg-boss-7-voting-list-2-cinemapettai
bigg-boss-7-voting-list-2-cinemapettai

மேலும் வினுஷாவிற்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது. பிக் பாஸ் வீடு முழுவதும் ஏசி போடப்பட்டிருப்பதால் அவருக்கு சுத்தமாகவே செட்டாகவில்லை. உடல் நிலையை காரணம் காட்டி கடந்த வாரமே பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்ப பார்த்தார். இருப்பினும் ஒரு வாரம் வாய்ப்பு கொடுத்து பார்த்தார்கள். அப்படியும் வினுஷா அதை சரியாக பயன்படுத்தாததால் இந்த வாரம் அதிரடியாக வெளியேறப் போகிறார். இந்த வேஸ்ட் பீஸ் வெளியே போறதில்ல தப்பே இல்ல.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்