ஒரே ஒரு சீரியலை வைத்து டிஆர்பி லிஸ்டில் முதலிடம் பிடித்த சன் டிவி.. வயிற்றெரிச்சலில் மற்ற சேனல்கள்!

சின்னத் திரை ரசிகர்கள் பார்க்கக்கூடிய அன்றாட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வைத்து டிஆர்பியில் எந்த சேனல் முதலிடத்தைப் பிடித்துள்ளது மற்றும் எந்த சேனலை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர் என்பதை தெரிவிக்கும் வகையில் கருத்துக்கணிப்பின் அடிப்படை டாப் சேனல்கள் லிஸ்ட் ஒவ்வொரு வாரமும் இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாப் 5 சேனைகளின் லிஸ்டில் முதலிடத்தை சன் டிவி பிடித்துள்ளது. காலம் காலமாக சன் டிவி தன்னுடைய முதல் இடத்தை தக்கவைப்பதில் குறிக்கோளாய் இருந்துவருகிறது.

அதற்கேற்றாற்போல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரோஜா சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உண்டு. இந்த சீரியலில் 100-வது எபிசோடில் ரோஜா-அர்ஜுன் இருவருக்கும் முதலிரவு நடத்தப்பட்டு ரசிகர்களுக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியாக விருந்தளித்தனர்.

அத்துடன் இந்த சீரியலை பற்றி தெரியாதவர்களும் ஆயிரமாவது எபிசோடில் சன் டிவி செய்த லீலையால், ரோஜா சீரியலை புதிதாக பார்க்கும் ரசிகர்களும் அதிகரித்து விட்டனர். எனவே ஒரே ஒரு சீரியலை வைத்து ரசிகர்களை தன் வசம் ஈர்க்கும் சன் டிவி மட்டு சேனல்களுக்கு போட்டியாக விதவிதமான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டு அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

top-channel-list-cinemapettai
top-channel-list-cinemapettai

இதேபோன்றே இரண்டாவது இடத்தைப் பிடித்த விஜய் டிவியும் புது புது கதைகளத்துடன் சீரியல்களை வரிசையாக தரையிறக்கி ரசிகர்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் ஜீ தமிழ் கடந்த மாதங்களாகவே பின்னுக்குத் தள்ளப்பட்டு மூன்றாவது இடத்தை தற்போது தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மேலும் திரைப் படங்களை வரிசையாக திரையிட்டு கொண்டிருக்கும் கே டிவிக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் ஐந்தாவது இடம் ஸ்டார் விஜய் சூப்பர் பெற்றுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்