இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 6 படங்கள்.. வெறித்தனமாக வரும் கருடன் சூரி

OTT, theatres releases this week: மே மாத தொடக்கமே ஆரவாரமாக தான் இருந்தது. அரண்மனை 4 நூறு கோடியை தாண்டி வசூலித்த நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் கவின், சந்தானம், ஹிப் ஹாப் ஆதி ஆகியோரின் படங்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அந்த வரிசையில் இந்த மாத இறுதி வாரமான மே 31 அன்று என்னென்ன படங்கள் தியேட்டரில் வெளியாகிறது என்பதை இங்கு காண்போம். இதில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி ஆகியோர் நடித்திருக்கும் கருடன் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

ட்ரெய்லரிலேயே வெறித்தனத்தை காட்டியிருந்த இப்படம் தியேட்டரில் நிச்சயம் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் விக்ரமனின் மகன் நடித்திருக்கும் ஹிட் லிஸ்ட் மே 31 வெளியாகிறது.

மிரட்ட வரும் சூரியின் கருடன்

மேலும் தலைவாசல் விஜய், நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் அக்காலி படமும் மே 31 வெளியாகிறது. அடுத்ததாக ஜான்வி கபூர் நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி 31ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.

இது தவிர இந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் உப்பு புளி காரம் வெப் சீரிஸ் வெளியாகிறது. நாளை வெளியாகும் இந்த தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, தீபக் ரமேஷ் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர்.

Kavin
Soori
Santhanam
Hiphop Adhi
Sasikumar

அடுத்ததாக தமன்குமார், எம் எஸ் பாஸ்கர், வேலராமமூர்த்தி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஒரு நொடி 31ம் தேதி ஆகா தமிழ் தளத்தில் வெளியாகிறது. பல திருப்பங்கள் நிறைந்த இப்படம் தியேட்டர்களிலேயே அதிக கவனம் பெற்றது.

அதை தொடர்ந்து டிஜிட்டலிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக 6 படங்கள் இந்த வாரம் வெளிவரும் நிலையில் அரண்மனை 4, ஸ்டார், எலக்சன் ஆகிய படங்களை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது.

Aranmanai 4
Garudan
Star
Election
Inga Naan Thaan Kingu
Oru Nodi

அதேபோல் இங்க நான் தான் கிங்கு படத்தை ஹாட்ஸ்டார் வாங்கி இருக்கிறது. இந்த படங்கள் அனைத்தும் ஜூன் மாதத்தின் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர், ஓடிடியில் கவனம் பெற்ற படங்கள்

- Advertisement -