வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கௌதம் மேனன் படத்தை நிராகரித்த விஜய்.. ஆனாலும் அவரைப் பிடிக்க இப்படி ஒரு காரணமா.?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருப்பார்கள். எல்லாவற்றிலும் புதுமை மற்றும் ஸ்டைலான அவற்றை காட்ட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

அதாவது கௌதம் மேனன் சினிமாவிற்கு வந்த புதிதில் தலயை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு யார் தல என கேட்டிருப்பார். அதன்பின்பு அஜீத்துடன் என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றி இருந்தார். அதன் பிறகு சமீபத்தில் விஜய்யா, அஜித்தா என்ற கேள்விக்கு உடனே சற்றும் யோசிக்காமல் விஜய் என பதில் அளித்து இருப்பார்.

இந்நிலையில் ஏற்கனவே விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்தது. அதாவது யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய் வைத்த இயக்க கௌதம் மேனன் முடிவெடுத்திருந்தார். ஆனால் இப்படம் ஆரம்பக்கட்டத்திலேயே கைவிடப்பட்டது.

இப்படத்தில் விஜய் 21 வயது இளைஞனாக உள்ளார். அப்போது ஒரு விமான குண்டு வெடிப்பில் படத்தின் கதாநாயகியை இழக்கிறார். அப்போது விஜய் யாருடைய உதவியும் இல்லாமல் குண்டுவெடிப்புக்கு காரணமாக உள்ளவர்களை கண்டுபிடிக்கிறார்.

பின்பு குண்டு வெடிப்பு கண்டுபிடிக்கும் பிரிவில் அதிகாரியாக சேருகிறார் விஜய். கௌதம் மேனன் இந்த படத்தின் கதையை சொன்னவுடன் இப்படிப்பட்ட கதை இப்போது வேண்டாம். கண்டிப்பாக பின்வரும் காலங்களில் பண்ணலாம் என சொல்லி உள்ளார்.

கிட்டத்தட்ட 2012 லே ஆரம்பித்த இந்த படம் விஜய் நிராகரித்ததால் தற்போது வரை தொடங்கப்படாமல் உள்ளது. அஜித், சூர்யா, கமல் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய கௌதம் வாசுதேவ மேனன் விஜய்யுடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்ற ஆசையுடன் உள்ளார்.

- Advertisement -

Trending News