அந்த நடிகை ஆடியது தான் பிரச்சனையா.. சர்ச்சையில் சிக்க வைத்தது இவர்களா?

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பாடலால் படம் சர்ச்சைக்குள்ளானது தற்போது நிகழ்ந்துள்ளது. ஏனென்றால் தெலுங்கு நடிகர் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு அந்த அலட்டல் இல்லாத நடிகை குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்தப் பாடல் வெளியானதும் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், பாடல் வரிகளை வைத்து சர்ச்சைக்குள்ளானது. ஒரு சில சினிமா பாடல்கள் சர்ச்சையில் சிக்குவது இயல்பு. ஆனால் இந்த முறை முற்றிலும் வித்தியாசமாக சர்ச்சையை கிளப்பி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையையே வியக்க வைத்துள்ளது.

இந்தப் பாடலுக்கு ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் தற்போது சந்தேகம் கிளம்பியுள்ளது. ஏனென்றால் இந்தப்படத்தில் அந்த நடிகை கவர்ச்சியான பாடலுக்கு ஆடியது தான் படம் சர்ச்சையில் சிக்கியதற்கு காரணம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கசிந்துள்ளது.

அதுவே இந்தப் பாடலுக்கு வேறு ஒரு நடிகை ஆடி இருந்தால் இந்த அளவுக்கு சர்ச்சை கிளம்பி இருக்காது. அத்துடன் விவாகரத்து செய்துவிட்டால் அவரை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்று ஏகப்பட்ட பிரச்சினைகளை கணவன் தரப்பிலிருந்து கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்தப்பாடல் சர்ச்சைக்கும் முன்னாள் கணவன் தான் காரணம் என சொல்லப்படுகிறது. சூப்பர் ஹிட் அடிக்க இருந்த பாடலை திசை திருப்பி சர்ச்சையில் சிக்க வைத்ததாகவும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் முனுமுனுக்கின்றனர்.

அத்துடன் இந்த நடிகை வேகமாக வளர்வதை தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் அளிப்பது அந்த நடிகைக்கு நம்பிக்கை அளிக்கிறது. இருப்பினும் இந்தப் பாடலுக்கு உரிய சர்ச்சை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்