லால் சலாமில் ரஜினி முஸ்லிமாக நடிக்க காரணம்.. பரபரப்பை கிளப்பிய பயில்வான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி உடன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த படத்தில் செம மாஸ் லுக்கில் ரஜினி இடம் பெற்றிருந்த நிலையில் லால் சலாம் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்ய தொடங்கி விட்டனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இப்படம் கிரிக்கெட் கதையை மையமாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.

Also Read : தொப்பி வாப்பாவாக மாறிய சூப்பர் ஸ்டார்.. லால் சலாம் போஸ்டரை பங்கம் செய்த நெட்டிசன்கள்

லால் சலாம் போஸ்டர் வெளியான நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதலில் லைக்காவிடம் லால் சலாம் படத்தை எடுப்பதாக சொன்ன நிலையில், இந்நிறுவனம் படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதன் பிறகு ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்தால் படத்தை தயாரிப்பதாக லைக்கா கண்டிஷன் போட்டுள்ளது. எனவே மகளுக்காக ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். மேலும் ரஜினி முஸ்லிம்களை நண்பர்களாக பார்க்கக்கூடியவர். பாட்ஷா படத்தில் அவர் முஸ்லிமாக நடிக்கவில்லை என்றாலும் டைட்டில் வைக்க சம்மதித்தார்.

Also Read : நமக்கு மானம் மரியாதை தான் முக்கியம்.. லால் சலாம் படத்திலிருந்து வரிசையாக பிச்சு கிட்டு போகும் பிரபலங்கள்

இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லால் சலாம் படத்தில் ரஜினி முஸ்லிமாக நடிக்கிறார். சமீபகாலமாக ஒரு அரசியல் கட்சியை சார்ந்து ரஜினி செயல்படுகிறார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு சரியான பதிலடி கொடுக்க தான் ரஜினி இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கிறார் என பயில்வான் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் கதையைக் கேட்டு மிரண்டு போனதாக பயில்வான் கூறியிருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என உறுதியளித்துள்ளார். இந்த சூழலில் எப்போதுமே ரஜினி மதம், ஜாதி, இனம் எதையுமே பார்க்க மாட்டார். மேலும் இந்த படமும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்றும் பயில்வான் கூறியுள்ளார்.

Also Read : எக்ஸ் பொண்டாட்டிக்கு போட்டியாக இறங்கிய தனுஷ்.. லால் சலாம் படத்தில் ஏற்பட்ட சிக்கல்

- Advertisement -