ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ஹேப்பியா இருக்க இதான் சீக்ரெட்.. 46 வயதிலும் இளமையுடன் வேட்டையன் பட நடிகை பகிர்ந்த தகவல்

பிரபல நடிகையான மஞ்சுவாரியார் வாழ்க்கையில் ஹேப்பியாக இருப்பது எப்படி என்ற சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் அஜித் மாதிரி இவரும் ஒரு பிலாசபர் என்று புகழ்ந்து வருகின்றனர்.

மலையாள லேடி சூப்பர் ஸ்டார்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவிலில் பிறந்தாலும் கேரளாவில் வளர்ந்தவர். அதனால் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளும் அவருக்கு அத்துப்படி. 90 களில் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, பாடகியாகவும் புகழ்பெற்றார். இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்த நிலையில் இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் பிரதிவிராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார் மஞ்சுவாரியர்.

அதன்பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்த மஞ்சுவாரியர் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிமுகம் நடிகைக்கான விருதை பெற்றார். அதன்பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் நடிப்பில் உருவான துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்து மஞ்சு வாரியர் அசத்தியிருந்தார்.

இப்படி சினிமாவில் கிடைக்கும் கேரக்டரில் நடித்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் மஞ்சு வாரியருக்கு தமிழ் நாட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்திலும் முக்கிய ரோலில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அதில் ரஜினியுடன் அவர் இணைந்து ஆடும் மனசிலாயோ பாடல் அனிருத் இசையில் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டு. இப்பாடலுக்கு அவர் அணிந்த சேலை, கண்ணாடியை, டான்ஸ் மூமென்டுகள் இதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி, ஷார்ட் மற்றும் வீடியோவாக வெளியிட்டு ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

மகிழ்ச்சியாக இருக்க மஞ்சுவாரியர் சொல்லும் சீக்ரெட்

இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் மஞ்சு வாரியர் கூறியதாவது; ’’நாம் மகிழ்ச்சியுடன் இருக்க, வெளியில் இருந்து எந்த உதவியையும் தேட வேண்டியதில்லை. அது நமக்குள்தான் இருக்கிறது. மாறாக, ஒரு பொருளை பார்ப்பது, கேட்பதில் மட்டும்தான் சந்தோசம் இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம்.

அப்படி சந்தோசமாக இருக்க, தனிமையில் இருந்தாலும் முடியும். எதுவும் செய்யாமல் இருந்தாலும் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியும். நானும் தனிமையில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்த வேலையையும் செய்யாமல் கூட என்னால் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

விஜய் 69 படத்தில் மஞ்சு வாரியர்?

எப்போதும் முகத்தில் புன்னகையுடன் உற்சாகமுடன் பேசி வரும் 46 வயதான மஞ்சு வாரியர் அஜித் மாதிரி பிலாசபராகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் விவாகரத்து பெற்றார். இருப்பினும் சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் வாழ்ந்து வருவதுடன், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பதுடன் அதில் தனது நடிப்புக்காகவும் பேசப்படுகிறார். அடுத்து, விஜய் 69 படத்தில் அவர் நடிப்புக்கு தீனி போடும் வகையில் ஹெச்.வினோத் ஒரு முக்கிய ரோலில் அவரை நடிக்க வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News