ஊர் ஊராய் சுற்றும் சிறுத்தை சிவா.. கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போவதற்கான காரணம் இது தான்

Siruthai Siva In Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு பான் இந்தியா மூவி படமாக உருவாகி இருக்கிறது. அத்துடன் இப்படத்தில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டது.

அந்த வகையில் இப்படம் எப்போது திரையரங்குகளுக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் இன்னும்வரை ரிலீஸ் செய்தியை கங்குவா டீம் அறிவிக்கவில்லை.

அதற்கு காரணம் ஆரம்பத்தில் இருந்து இப்படத்தின் CG வேலையில் நிறைய சொதப்பல்கள் இருந்திருக்கிறது. இதனால் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா திருப்தி அடையவில்லை. இதனை சரி கட்டுவதற்காக பாண்டிச்சேரி, சென்னை மற்றும் கேரளா போன்ற இடங்களுக்கு சுற்றி வருகிறார் சிறுத்தை சிவா.

பாபி தியோலை பாராட்டிய கங்குவா டீம்

ஏன் என்றால் மறுபடியும் அங்கே போய் விட்ட குறை தொட்ட குறையாக பல வேலைகள் இருப்பதால் ஊர் ஊராக சுற்றி வருகிறார்கள். பொதுவாக ஆர்டிஸ்ட்கள் சொதப்பினால் மட்டும்தான் படப்பிடிப்பு இழுத்தடிக்கும். ஆனால் இப்படத்தில் சிஜி ஒர்க் மட்டும் அதிகமாக இருப்பதால் இன்னும் முழுமை அடையாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது.

முக்கியமாக இதில் பாராட்டக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் பாபி தியோல். இவருடைய நடிப்பு, டெடிகேஷன் பார்ப்பதற்கு அவ்வளவு வியப்பாக இருக்கிறதாம். அந்த அளவிற்கு இயக்குனர்கள் எதிர்பார்ப்பையும் மீறி நடிப்பை பிரமாதமாக கொடுத்திருக்கிறாராம்.

இங்கு இருக்கும் நடிகர்கள் மாதிரி டெடிகேஷன் ஆக நடித்த ஒரே ஒரு நடிகர் பாபி தியோல் தான் என்று மூச்சுக்கு 300 தடவை சிறுத்தை மற்றும் சூர்யா பாராட்டி தள்ளுகிறாராம். அந்த வகையில் இவருடைய நடிப்பு மட்டும் தான் இப்படத்தில் அதிக அளவில் திருப்தி அடைய வைத்திருக்கிறது.

மேலும் இப்படத்தின் சிஜி ஒர்க் முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். இதற்கு இடையில் சூர்யா அவருடைய அடுத்த படத்திற்கான வேலையை கார்த்திக் சுப்புராஜ் உடன் ஆரம்பித்து விட்டார். இதற்கான படப்பிடிப்பும் துவங்க இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்