இதனால தான் ஆடியோ பங்ஷனுக்கு போறதில்ல.. 20 வருட அனுபவத்தை கூறிய லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாராவின் நடிப்பில் தற்போது கனெக்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது. மாயா திரைப்படத்தின் மூலம் அனைவரையும் மிரட்டிய அஸ்வின் சரவணன் மீண்டும் நயன்தாராவை வைத்து ஒரு திரில்லர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா இப்போது ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் தன் சினிமா பயணத்தை பற்றிய அனைத்தையும் விவரித்துள்ளார். தற்போது 20 வருடங்களை நிறைவு செய்ய போகும் நயன்தாரா முதல் 10 வருடங்களில் சினிமாவில் தான் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றும் அடுத்த பத்து வருடங்களில் ஓரளவுக்கு சினிமாவை பற்றி நான் புரிந்து கொண்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு வரை சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் வருவது அரிதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி கிடையாது. வருடத்தில் ஐந்து படங்களாவது சோலோ ஹீரோயின் கதைகளாக வந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் நான் விரும்புகிறேன் என்றும் யாராவது என்னிடம் உன்னால் முடியாது என்று கூறினால் அதை செய்தே காட்ட வேண்டும் என்ற வைராக்கியமும் எனக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.

Also read: கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய விக்கி-நயன் ஜோடி.. மீடியா முன் கிழித்தெறிந்த ஜிபி முத்து

அப்படித்தான் நான் பில்லா திரைப்படத்தில் கிளாமராகவும், யாரடி நீ மோகினி படத்தில் ஹோம்லி ஆகவும் ஒரே நேரத்தில் நடித்தேன். அதேபோன்று பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நேரத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கவும் நான் ஆர்வம் காட்டுகிறேன் என கூறிய அவர் தான் ஏன் ஆடியோ பங்க்ஷன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அதாவது அவர் பிரபலமாகாத சமயத்தில் இது போன்ற விழாக்களுக்கு சென்றால் பெரிய அளவில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களாம். அது மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு ஓரத்தில் நிற்க வைத்து விட்டு பேசுவதற்கு கூட அழைக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அதனால் தான் நான் இது போன்ற விழாக்களுக்கு செல்வதில்லை. என்றாவது ஒருநாள் நான் பெரிய ஹீரோயின் ஆக வளர்த்த பிறகு இப்படிப்பட்ட பங்க்ஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

Also read: சொந்த படம் என்றதும் தீயாய் வேலை செய்யும் நயன்தாரா.. ரிலீசுக்கு முன்பே 3 மடங்கு லாபம் பார்த்த கனெக்ட்

ஆனால் இப்போது நான் முன்னணி அந்தஸ்திற்கு வந்த பிறகும் அதை ஃபாலோ பண்ணவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் சோசியல் மீடியாவில் இல்லாவிட்டாலும் தன்னை பற்றி வரும் ட்ரோல்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒல்லியாக இருப்பதை பலரும் கலாய்த்த விஷயத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதாவது கனெக்ட் படத்தில் நான் 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறேன். அதற்கேற்றவாறு தான் என்னுடைய தோற்றத்தை காட்ட முடியும். அதை விட்டுவிட்டு கிளாமராகவோ சோகமான காட்சிகளில் பளிச்சென்றோ இருக்க முடியாது. அதனால் ட்ரோல் செய்பவர்கள் என்ன செய்தாலும் கிண்டல் தான் செய்வார்கள். அதை நான் கண்டு கொள்வதில்லை என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: லேடி சூப்பர் ஸ்டாரை லாக் செய்த திரையரங்கு உரிமையாளர்கள்.. வேறு வழியின்றி சரண்டரானார் நயன்தாரா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்