மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி வாங்கும் இயக்குனர்.. ஏகே 62 தாமதத்திற்கு காரணம் இதுதான்

துணிவு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அஜித்தின் அடுத்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் தற்போது அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் எப்போதோ ஷூட்டிங் ஆரம்பித்திருக்க வேண்டிய ஏகே 62 இப்போது வரை ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனரை முடிவு செய்வதில் இருந்த குளறுபடி தான்.

விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து தற்போது மகிழ்திருமேனி தான் அஜித்தை இயக்க இருக்கிறார். இது குறித்த பல செய்திகள் வெளி வந்தாலும் இன்னும் தயாரிப்பு நிர்வாகம் படம் சம்பந்தமாக எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் ரசிகர்களும் என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Also read: ஷங்கரின் 4 படங்களை ரிஜெக்ட் செய்த அஜித்.. அவர் சவகாசமே வேண்டாம் என்பதற்கு இது தான் காரணம்

அந்த வகையில் ஏகே 62 இந்த அளவுக்கு தாமதமாக அஜித் தான் முக்கிய காரணமாக இருக்கிறாராம். ஏனென்றால் தற்போது அவர் படத்தின் கதையில் ரொம்பவும் ஆர்வம் காட்டி வருகிறாரார். எந்த கதை சொன்னாலும் ஏதாவது ஒரு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறுகிறாராம். இந்த குழப்பத்தில் தான் விக்னேஷ் சிவன் ஏ கே 62 படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு அடுத்ததாக வந்த மகிழ்த்திருமேனி தற்போது அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் மாட்டிக் கொண்டு ரெண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போல் இருக்கிறாராம். ஏனென்றால் ஒரு பக்கம் அஜித் கதையில் கூறும் மாற்றங்கள் மறுபக்கம் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்று லைக்கா கொடுக்கும் அழுத்தம் என பாவம் மனுஷன் திண்டாடிதான் போகிறார்.

Also read: அஜித்தை வைத்து தயாரித்து மண்ணை கவ்விய அமிதாப் பச்சன்.. ஆனா மொத்த பாடல்களும் ஹிட்டுன்னு சொன்னா நம்பவா போறீங்க

அது மட்டுமல்லாமல் கதை விஷயத்தில் அஜித்திற்கு நெருக்கமான நட்பு வட்டாரமும் சில ஆலோசனைகள் சொல்லி குழப்புகிறார்களாம். அவரும் அல்லக்கைகளின் பேச்சைக் கேட்டு கதை விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறாராம். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஏகே 62 தற்போது தாமதம் ஆகி வருகிறது.

இது எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்று பார்த்தால் துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான் அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் அஜித் தற்போது இயக்குனரை படாத பாடு படுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் மீண்டும் விஜய்யுடன் நேரடியாக போட்டி போட வேண்டும் என்றால் எண்ணமும் அவருக்கு இருக்கிறதாம். இப்படி பல குழப்பங்களுடன் இருக்கும் இந்தப் படம் எப்படியும் இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடும் என்கிறது திரையுலக வட்டாரம்.

Also read: மாதவனுக்காக உருவாக்கிய கதை.. அஜித் நடித்ததால் படுதோல்வி, புலம்பி தவிக்கும் இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்