பிச்சைக்காரனுடன் அதிக நெருக்கம் காட்டிய இயக்குனர்.. அடச்சீ! விவாகரத்துக்கு இப்படி ஒரு காரணமா

பல வெற்றித் திரைப்படங்களை எடுத்து ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்து இருப்பவர் அந்த பிரபல இயக்குனர். சினிமாவில் பேரும், புகழும் அடைந்த இயக்குனருக்கு சொந்த வாழ்வு சரியாக அமையவில்லை. சமீபத்தில்தான் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார்.

ஏற்கனவே ஒரு நட்சத்திர ஜோடி விவாகரத்து அறிவிப்பால் பரபரப்பாக இருந்த திரை உலகம் இந்த விவகாரத்து செய்தியை கேட்டு மேலும் பரபரப்பானது. அதன்பிறகு இயக்குனரின் விவாகரத்திற்கு இதுதான் காரணம் என்று புது புது செய்திகள் மீடியாவில் உலா வந்தது.

ஆனால் அதெல்லாம் கிடையாது விவாகரத்துக்கு இதுதான் காரணம் என்று தற்போது ஒரு புதிய செய்தி வெளிவந்துள்ளது. என்னவென்றால் இயக்குனர் சிலகாலமாக ஒரு பிச்சைக்காரர் உடன் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். ஒரு நாளின் முக்கால்வாசி நேரத்தை அவருடன் தான் இயக்குனர் கழிப்பாராம்.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு பட்டுத்துணி எடுத்துக் கொடுத்து ராமேஸ்வரம் இன்னும் பிற ஊர்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று வந்துள்ளார். பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இயக்குனரின் மனைவிக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அதோடு இயக்குனரும் தன் மனைவியிடம் அன்பாகவும், பிரியமாகவும் மனசு விட்டு பேசுவது கிடையாதாம். இயக்குனரின் போக்கு திரைத்துறையில் அனைவருக்கும் தெரிந்ததுதான். இவர் இயக்கும் படங்களில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளை வெளுத்து வாங்கி விடுவார்.

அவ்வளவு கோபக்காரரான இவர் மனைவியிடமும் அதையே மெயின்டன் செய்துள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த மனைவி இது சரிப்பட்டு வராது என்று சில வருடங்களுக்கு முன்பே அவரை பிரிந்து சென்றுள்ளார். ஆனாலும் இது வெளியே தெரியாமல் இருந்துள்ளது. தற்போது விவாகரத்து கிடைத்த உடன் தான் அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் இப்படி எல்லாம் பிரச்சனை இருந்தது தெரிய வந்திருக்கிறது.

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -