சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குலசாமியை தேடிச் சென்ற நயன்தாரா.. பின்னணி காரணம் இதுதான்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் கெத்தாக வலம் வரும் நயன்தாரா இப்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்கேற்றார் போல் அவருடைய அடுத்தடுத்த புதுப்பட அறிவிப்புகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் அவர் திடீரென விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருந்தார்.

அப்போது அவர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் நடந்து கொண்ட முறை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தற்போது ஓய்ந்த நிலையில் நயன்தாரா எதற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்றார் என்ற காரணம் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவர் சர்ச்சைகளின் ராணியாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தான் இவர் அதிக பிரச்சனைகளை சந்தித்தார்.

Also read: 9 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி.. சர்ப்ரைஸாக வெளிவந்த நயன்தாராவின் 75வது பட அறிவிப்பு

அதிலும் இவருடைய குழந்தைகளை வைத்து தான் பல விமர்சனங்கள் எழுந்தது. அதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கனெக்ட் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இப்படி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் அவருக்கு பாதகமாகவே அமைந்தது.

மேலும் திருமணத்திற்கு கூட விக்னேஷ் சிவனின் சொந்தங்கள் யாரும் அழைக்கப்படவில்லை. இதனாலேயே நயனின் மாமியார் வீட்டு தரப்பில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த நயன்தாரா ஜோதிடரிடம் விசாரித்தாராம். அதற்கு அவர் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை முறையாக செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Also read: செல்லும் இடமெல்லாம் விரட்டிய நபர்கள்.. மூக்குத்தி அம்மனாக மாறி முகம் சிவந்த நயன்தாரா

அதனாலேயே நயன் தன் கணவருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரச்சனை தீர வேண்டும் என பிரார்த்தனை செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கோபமாக இருக்கும் சொந்த பந்தங்களை சமாதானப்படுத்தும் வேலையிலும் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் கமுக்கமாக செய்துவிட்டு தான் அந்த ஜோடி ஊர் திரும்பி இருக்கிறது.

தற்போது மனநிறைவுடன் இருக்கும் நயன்தாரா இனி தொட்டதெல்லாம் துலங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் மீது இருந்த விமர்சனங்களை எல்லாம் போக்கி அவரை முன்னணி அந்தஸ்திற்கு கொண்டு வரும் வேலையையும் அவர் செய்து வருகிறாராம்.

Also read: ரெண்டே ஹீரோக்களால் கேரியரை தொலைத்த நமீதா.. நம்பி பறிபோன சினிமா வாழ்க்கை

- Advertisement -

Trending News