புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் டிவியில் உருப்படியான ஒரே சீரியல் இதுதான்.. ரொமான்ஸில் புகுந்து விளையாடும் டாம் அண்ட் ஜெர்ரி

Vijay Tv Serial: விஜய் டிவியில் எத்தனையோ சீரியல்கள் இருந்தாலும், தற்போது இந்த ஒரு நாடகத்தை மட்டும்தான் விரும்பி பார்த்து வருகிறார்கள். அதனாலயே டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியில் இந்த நாடகம் தான் முதலிடம் வகித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் எதிர்நீச்சல் சீரியலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இது ஒன்று தான் உருப்படியான சீரியல் என்று சொல்லும் அளவிற்கு தற்போது பெயர் வாங்கி இருக்கிறது.

அப்படிப்பட்ட சீரியல் தான் சிறகடிக்கும் ஆசை. இதில் முத்து மற்றும் மீனாவின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ரொமான்ஸ் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. அத்துடன் சாதாரண குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகளை எதார்த்தமாக கொண்டு வருகிறது. வழக்கம்போல் காசு பணம் இருந்த மருமகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், எதுவும் இல்லாமல் வந்த மருமகளை ஏளனமாக பேசுவதும் போல மாமியார் அசத்தலான நடிப்பை கொடுத்து வருகிறார்.

ஆனாலும் முத்து, தன் பொண்டாட்டியை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காமல் பொக்கிஷமாக வைத்து ரொமான்ஸ் பண்ணி வருகிறார். ஆனால் தற்போது இவர்களுக்கிடையே ஒரு சண்டை ஆரம்பமாக இருக்கிறது. அதாவது ரவியின் காதலுக்கு தடையாக முத்து இருக்கிறார். எப்படியாவது ரவி சுருதி கல்யாணத்தை நடக்க விடக்கூடாது என்று முத்துவின் அப்பாவும் தீர்மானமாக இருக்கிறார்.

ஆனால் சுருதி, மீனாவிடம் நான் உயிருக்கு உயிராக ரவியை காதலிக்கிறேன். எங்களுடைய திருமணத்தை நீங்கள் தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்கிறார். அதனால் எப்படியாவது மீனா இவர்களுடைய திருமணத்தை நடத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இது கொஞ்சம் கூட முத்துவுக்கு பிடிக்கதால் இவர்களுக்குள் அவ்வப்போது பிரச்சனை வருகிறது.

இதற்கிடையில் முத்து, தன் மனைவி மீனாவின் தங்கையை தம்பிக்கு கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் இது மட்டும் மீனாவின் மாமியாருக்கு தெரிந்தால் கண்டிப்பாக தன்னுடைய மகன் காதலுக்கு சம்மதத்தை தெரிவித்து முன்னாடி இருந்து கல்யாணத்தையும் பண்ணி வைப்பார்.

ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை தன் வீட்டுக்கு வரும் மருமகள் பணக்காரியாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஆசை. அந்த வகையில் சுருதி பெரிய பணக்காரி என்று தெரிந்து விட்டால் ரவி சுருதி திருமணம் சுமூகமாக முடிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்குள் மீனா மற்றும் முத்துக்கு இடையில் பிரச்சனை வெடித்து பிரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் யார் யாருடன் சேரப் போகிறார் என்பது பொறுத்துதான் மீதமுள்ள கதை சுவாரஸ்யமாக அமையும்.

- Advertisement -

Trending News